ஐபிஎல் தொடர் : 6000 ஓட்டங்கள் கடந்த வீரர்கள் பட்டியல் - முதலிடத்தைப் பிடித்தார் விராட் கோலி
ஐபிஎல் தொடர்களில் 6000 ஓட்டங்கள் கடந்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல் 2023 போட்டி
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
பெருமை பெற்ற விராட் கோலி
சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அப்போட்டியில் விராட் கோலி 164 நாட்களில் 1000 ஓட்டங்கள் குவித்து விராட் கோலி சாதனைப் படைத்தார்.
மேலும், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் செப்டம்பர் 8ம் தேதி 24000 ஓட்டங்களை எடுத்தார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 25000 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 25,000 சர்வதேச ஓட்டங்களை எட்டிய 6து கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சாதனை படைத்த விராட்கோலி
இந்நிலையில், நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர்களில் 6000 ஓட்டங்கள் கடந்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
இது குறித்து வெளியான பட்டியலில், விராட் கோலி 6844 ஓட்டங்கள் எடுத்து முதலிடத்திலும், 6477 ஓட்டங்கள் எடுத்து ஷிகர் தவான் இரண்டாவது இடத்திலும், 6109 ஓட்டங்களை எடுத்து டேவிட் வார்னர் 3-வது இடத்திலும், 6014 ஓட்டங்கள் எடுத்து ரோஹித் சர்மா 4வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் விராட் கோலிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Most runs in IPL history:
— Johns. (@CricCrazyJohns) April 18, 2023
Kohli - 6844
Dhawan - 6477
Warner - 6109
Rohit - 6000*
Raina - 5528
Rohit Sharma becomes the 4th cricketer to complete 6000 runs in IPL - Legend. pic.twitter.com/8hZJEzVgtR