சுவிட்சர்லாந்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்கள் வைத்துக்கொள்ள அனுமதி உண்டா?
சுவிட்சர்லாந்தில் வாழ்வோர், ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்கள் வைத்துக்கொள்ள அனுமதி உண்டா என்னும் கேள்விக்கான பதிலை இந்த செய்தியில் காணலாம்.
சுவிட்சர்லாந்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்கள் வைத்துக்கொள்ள அனுமதி உண்டா?
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை இரட்டைக் குடியுரிமை என்பது சாதாரண விடயமாகும். ஆனாலும், சுவிட்சர்லாந்தில் வாழ்வோர் மூன்று பாஸ்போர்ட்கள் வைத்துக்கொள்ள அனுமதி உண்டா?
எளிமையாகக் கூறினால், 1992, ஜனவரி 1ஆம் திகதி முதல், சுவிட்சர்லாந்தில் வாழ்வோர், எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், பல பாஸ்போர்ட்கள் வைத்துக்கொள்ள சுவிஸ் சட்டத்தில் அனுமதி உண்டு.
அதன் இன்னொரு பொருள் என்னவென்றால், சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிப்போர் தங்கள் சொந்த நாட்டின் குடியுரிமையை விட்டுக்கொடுக்கவேண்டியதில்லை.
என்றாலும், பல என்பதன் பொருள், உண்மையிலேயே ஒருவர் பல பாஸ்போர்ட்கள் வைத்துக்கொள்ளலாம் என்பது அல்ல.
ஒரு சுவிஸ் பாஸ்போர்ட்டும், வேறு இரண்டு நாடுகளின் பாஸ்போர்ட்ட்டுகளும் என வைத்துக்கொள்ளலாம்.
உதாரணமாக, ஒருவர் ஒரு அமெரிக்க பாஸ்போர்ட், ஒரு ஐரோப்பிய ஒன்றிய பாஸ்போர்ட் மற்றும் மற்றொரு நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார் என வைத்துக்கொள்வோம்.
அவர், தனது அமெரிக்க பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய ஒன்றிய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஐரோப்பாவுக்குள்ளும், தனது சொந்த நாட்டின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி தன் சொந்த நாட்டுக்கும் பயணிக்கலாம்.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை சுவிஸ் பாஸ்போர்ட் வைத்திருப்போரை சுவிட்சர்லாந்து தனது குடிமக்களாகவே கருதுகிறது. என்றாலும், மூன்று பாஸ்போர்ட்கள் வரை வைத்திருப்பவர்கள், மற்ற நாடுகளில் இடையூறுகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |