ஜேர்மனி வழியாக பயணிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் என்னென்ன?
ஜேர்மனிக்கு பயணிப்பதற்கு கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், ஜேர்மவழியாக பயணிப்பதற்கு ஏதாவது கட்டுப்பாடுகள் உள்ளனவா?
அதாவது, நீங்கள் வேறொரு நாட்டுக்குச் செல்கிறீர்கள். ஆனால், நீங்கள் ஜேர்மனியின் ஃப்ராங்க்பர்ட் விமான நிலையம் வந்து அங்கிருந்து மற்றொரு விமானத்தில் ஏறிச் செல்லவேண்டிய கட்டாயம் உள்ளது...
அப்படி ஜேர்மனிக்குள் வராமலே விமானம் மாறிச் செல்வதற்கு ஏதாவது கட்டுப்பாடுகள் உள்ளனவா என்ற கேள்விக்கான பதில் இந்த செய்தியில் உள்ளது.
நீங்கள் ஜேர்மனி வழியாக பயணிக்கிறீர்கள், அதாவது ஜேர்மனிக்குள் வராமல், விமான நிலையம் வந்து அங்கிருந்து வேறு விமானம் ஏறி மற்றொரு நாட்டுக்குச் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் வழக்கமான கொரோனா விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்கிறது ஜேர்மன் சுகாதார அமைச்சகம்.
அதாவது, நீங்கள் உங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தையோ, தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தையோ காட்டவேண்டிய அவசியமில்லை.
ஒரே ஒரு விடயத்தை நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் எந்த நாட்டுக்குச் சென்று சேரப்போகிறீர்களோ, அந்த நாட்டுக்கென சில விதிமுறைகள் இருக்கும். நீங்கள் பயணம் புறப்படும் முன் அந்த நாட்டின் விதிமுறைகள் என்னென்ன என்பதை மட்டும் சரிபார்த்துக்கொள்ளத் தவறவேண்டாம்!