இட்லி, தோசைக்கு அருமையான ரெடிமேட் சட்னி பொடி: ஒரே நிமிடத்தில் Instant சட்னி ரெடி
பொதுவாக அனைவரின் வீட்டிலும் குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு முறையாவது டிபனுக்கு சட்னி செய்யவேண்டியிருக்கும்.
வேலைக்கு அல்லது வெளியில் எங்கேயாவது அவசரமாக செல்லும்பொழுது இந்த ஒரே நிமிடத்தில் செய்யப்படும் ரெடிமேட் சட்னி பொடி உதவியாக இருக்கும்.
இந்த பொடியை செய்து காற்றுப்புகாத ஒரு டப்பாவில் சேகரித்து வைத்தால் 30 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வேர்க்கடை- 1 கப்
- பொட்டுக்கடலை- 1 கப்
- உளுந்து- 1/2 கப்
- காய்ந்த மிளகாய்- 8
- உப்பு- தேவையான அளவு
- தேங்காய்- 1 கப்
- கருவேப்பிலை- 1 கொத்து
- பூண்டு- 8 பல்
- கடுகு- 1/2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் தோலுரித்த வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் பொட்டுக்கடலை, உளுந்து ஆகியவற்றை தனி தனியாக மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக துருவிய தேங்காய், கருவேப்பிலை, பூண்டு, சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும்.
வறுத்த அனைத்து பொருட்களையும் ஒரு தட்டில் சேர்த்து சூடு போகும்வரை ஆறவைக்கவும்.
பின் வறுத்த அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுக்கவும்.
அரைத்த பொடியை ஒரு தட்டில் கொட்டி 20 நிமிடங்கள் கிளறிவிட்டு ஆறவைத்து எடுத்தால் ரெடிமேட் சட்னி பொடி தயார்.
ஒரே நிமிடத்தில் Instant சட்னி செய்ய, ஒரு பவுலில் தேவையான அளவு ரெடிமேட் சட்னி பொடி சேர்த்து தண்ணீர் ஊற்றி கலக்கி, கடுகு, உளுந்து ,கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டினால் Instant சட்னி ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |