ரியல் மாட்ரிடிடமும் அடிவாங்கிய பார்சிலோனோ..லா லிகாவில் மிரட்டல் ஆட்டம்
லா லிகா தொடர் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியது.
கிறிஸ்டென்சன் முதல் கோல்
மாட்ரிட்டின் சான்டியாகோ பெர்னாபியூ மைதானத்தில் நடந்த லா லிகா தொடர் போட்டியில் ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் மோதின.
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இரு அணிகள் மோதியதால், இப்போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே பார்சிலோனாவின் ஆண்ட்ரியேஸ் கிறிஸ்டென்சன் (Andreas Christensen) அபாரமான கோலை அடித்தார்.
அதற்கு பதிலடியாக ரியல் மாட்ரிட்டின் (Real Madrid) இளம் வீரர் வினிசியஸ் ஜூனியர் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார்.
ரியல் மாட்ரிட் வெற்றி
இதன்மூலம் முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது. இரண்டாம் பாதியின் 69வது நிமிடத்தில் Fermin Lopez (பார்சிலோனா) கோல் அடித்தார்.
அடுத்து லூகாஸ் வாஸ்க்யூஸ் மூலம் (73வது நிமிடம்) ரியல் மாட்ரிட் அணிக்கு இரண்டாவது கோல் கிடைத்தது.
பின்னர் வெற்றிக்கான கோலை ஜுடே பெல்லிங்காம் 90+1வது நிமிடத்தில் அடிக்க, ரியல் மாட்ரிட் அணி 3-2 பார்சிலோனாவை வீழ்த்தியது.
இது நடப்பு தொடரில் ரியல் மாட்ரிட் அணியின் 25வது வெற்றி ஆகும். மேலும், UEFA தொடரில் PSG அணியிடம் தோல்வியுற்ற பார்சிலோனா, தற்போது ரியல் மாட்ரிட் அணியிடமும் தோல்வியடைந்துள்ளது.
— Real Madrid C.F. (@realmadrid) April 21, 2024
? @RealMadrid 3-2 @FCBarcelona_es
— Real Madrid C.F. (@realmadrid) April 21, 2024
⚽ 6' Christensen
⚽ 18' @ViniJr (p.)
⚽ 69' Fermín
⚽ 73' @Lucasvazquez91
⚽ 90'+1' @BellinghamJude#ElClásico | #Emirates pic.twitter.com/vhOTMf5Wfk
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |