UEFA: திக் திக் அரையிறுதிப்போட்டி..பாயர்ன் முனிச்சை வீழ்த்தி ரியல் மாட்ரிட் அபார வெற்றி
சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கணக்கில் பாயர்ன் முனிச் அணியை வீழ்த்தியது.
ரியல் மாட்ரிட் வீரர்களின் நெருக்கடி
கால்பந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த போட்டியான, ரியல் மாட்ரிட் (Real Madrid) மற்றும் பாயர்ன் முனிச் (Bayern Munich) அணிகளின் 2வது லெக் அரையிறுதி Santiago Bernabeu மைதானத்தில் நடந்தது.
பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியில் ரியல் மாட்ரிட் அணி Attacking Modeயில் ஆடியது. அந்த அணி வீரர்களின் நெருக்கடியை சமாளிக்க பாயர்ன் முனிச் வீரர்கள் போராடினர்.
The technique from Kane ?#UCL pic.twitter.com/hGHzjFGjVK
— UEFA Champions League (@ChampionsLeague) May 8, 2024
எனினும், பாயர்ன் கோல் கீப்பர் மற்றும் கேப்டன் நியூயர் அபாரமாக செயல்பட்டு மாட்ரிட்டின் கோல் முயற்சிகளை முறியடித்தார். இதனால் முதல் பாதி இருதரப்பிலும் கோல் இன்றி முடிந்தது.
Vini ?#UCL pic.twitter.com/8wQDizaJOY
— UEFA Champions League (@ChampionsLeague) May 8, 2024
அல்போன்சோ டேவிஸ் கோல்
பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியின் 68வது நிமிடத்தில், பாயர்ன் அணியில் மாற்று வீரராக களமிறங்கிய அல்போன்சோ டேவிஸ் (Alphonso Davies) மிரட்டலாக கோல் அடித்தார்.
72வது நிமிடத்தில் மாட்ரிட் அணிக்கு கோல் கிடைத்தது. ஆனால், பாயர்ன் வீரர் கிம்மிக்கை ரியல் மாட்ரிட் வீரர் தள்ளிவிட்டதால் Foul என்று அறிவிக்கப்பட்டது.
? What a hit.
— UEFA Champions League (@ChampionsLeague) May 8, 2024
Alphonso Davies ?#UCL pic.twitter.com/ZKLdB2BYkD
அதனைத் தொடர்ந்து முதல் கோல் அடிக்க போராடிய மாட்ரிட் அணிக்கு, 88வது நிமிடத்தில் ஜோசெலு (Joselu) மூலம் கோல் கிடைத்தது.
மாற்று வீரராக வந்த ஜோசெலு 90+1வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடிக்க, அதுவே ரியல் மாட்ரிட்டின் வெற்றி கோலாக மாறியது.
இறுதியில் ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் பாயர்ன் முனிச் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
? ¡ESTAMOS EN LA FINAL! ?
— Real Madrid C.F. (@realmadrid) May 8, 2024
? @RealMadrid 2-1 @FCBayernES
⚽ 68' Alphonso Davies
⚽ 88' @JoseluMato9
⚽ 90'+2' @JoseluMato9#UCL | #APorLa15 pic.twitter.com/fhwnooeqrh
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |