14வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ரியல் மாட்ரிட்!
பாரிஸில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கால்பந்து உலகின் மிகப்பெரிய தொடரான சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிப்போட்டி பாரிஸில் நடந்தது. ரியல் மாட்ரிட் மற்றும் லிவர்பூல் அணிகள் இதில் மோதின.
இந்தப் போட்டியை காண ரசிகர்களுடன் பல்வேறு பிரபலங்களும் மைதானத்தில் குழுமியிருந்தனர். பரபரப்பாக நடந்த இந்த போட்டியின் முதல் பாதியில் ரியல் மாட்ரிட் கோல் அடித்தது. ஆனால் VAR தொழில்நுட்பத்தின்படி ஆய்வு செய்யப்பட்டு அது கோல் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
Photo Credit: Reuters
அதன் பின்னர் ஆட்டத்தின் 59வது நிமிடத்தில், ரியல் மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஜூனியர் கோல் அடித்தார். ஆனால் லிவர்பூல் அணியால் கடைசி வரை பதில் கோல் அடிக்க முடியவில்லை.
Photo Credit: REUTERS/Dylan Martinez
இதனால் ரியல் மாட்ரிட் 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 14வது முறையாக சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை அந்த அணி வென்றது.
இந்த போட்டியில் மொத்தமாக 20 முறை லிவர்பூல் வீரர்கள் கோல் அடிக்க முயன்றனர். ஆனால் ரியல் மாட்ரிட் கோல் கீப்பர் கோர்டோயிஸ் தன்னிடம் நேராக வந்த 9 கோல்களை தடுத்து அசத்தினார்.
Photo Credit: AP
Photo Credit: IANS