La Liga: ஒற்றை கோலால் வெற்றி பெற்ற Real Madrid
ரியல் சோசியேடட் அணிக்கு எதிரான போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆர்டா குலர் கோல்
லா லிகா தொடரின் Anoeta மைதானத்தில் நடந்த போட்டியில் ரியல் மாட்ரிட் (Real Madrid) அணியை எதிர்கொண்டது ரியல் சோசியேடட் (Real Sociedad).
ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் ரியல் சோசியேடட் அணி வீரர் டேக் அடித்த ஷாட் நூலிழையில் வலையில் இருந்து தவறியது.
29வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு கோல் கிடைத்தது. அந்த அணியின் இளம் வீரர் ஆர்டா குலர் (Arda Guler) அபாரமாக கோலை அடித்தார்.
ஆப்சைடு
அதற்கு பதிலடியாய் ரியல் சோசியேடட் அணிக்கு 32வது நிமிடத்தில் கோல் விழுந்தது. ஆனால் அது ஆப்சைடு கோல் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல் 73வது நிமிடத்திலும் விழுந்த கோல் ஆப்சைடு ஆனதால் ரியல் சோசியேடட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.
அதனைத் தொடர்ந்து, இரு அணி வீரர்களும் போராடியதால் இரண்டாம் பாதியில் கோல் விழவில்லை. இறுதியில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் அந்த அணியின் புள்ளிகள் 84 ஆக உயர்ந்துள்ளது. ரியல் மேட்ரிட் முதலிடத்தில் உள்ள நிலையில், பார்சிலோனா அணி 70 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |