கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய செய்தி! ரொனால்டோவைத் தொடர்ந்து வெளியேறும் செல்வாக்குமிக்க வீரர்
ரியல் மாட்ரிட் அணியில் இருந்து நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா வெளியேறுவதாக செய்தி வெளியானதால் கிளப் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வெளியேறிய ரொனால்டோ
போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2018ஆம் ஆண்டில் ரியல் மாட்ரிட் கிளப்பில் இருந்து வெளியேறினார்.
அதன் பின்னர் பிரெஞ்சு வீரர் கரீம் பென்சிமா ரியல் மாட்ரிட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார்.
அவர் ரியல் மாட்ரிட் அணிக்காக 353 கோல்கள் அடித்துள்ளார். இந்த நிலையில் பென்சிமா அணியை விட்டு வெளியேறுவதை ட்வீட் மூலம் ரியல் மாட்ரிட் உறுதிப்படுத்தியுள்ளது.
ரியல் மாட்ரிட்டில் 14 ஆண்டுகள்
இதன்மூலம் 14 ஆண்டுகளுக்கு பின் பென்சிமா ரியல் மாட்ரிட்டில் வெளியேறுகிறார். நடப்பு சீசன் அவருக்கு ரியல் மாட்ரிட்டில் கடைசி லீக் ஆகும்.
பென்சிமாவுக்கும், கிளப்புக்கும் இடையே பரஸ்பர உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துவதாகவும் மாட்ரிட் தெரிவித்துள்ளது.
அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஏற்கனவே ரொனால்டோவை இழந்ததால் வருத்தமடைந்த மாட்ரிட் ரசிகர்கள், தற்போது பென்சிமாவும் வெளியேறுவதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கிடையில் 35 வயதாகும் பென்சிமா, சவுதி புரோ லீக்கிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.