என் அம்மாவுக்கு பிடித்த அணி அது! 730 கோடியை எம்பாப்பே மறுத்ததின் பின்னணி
தனது தாயாருக்கு லிவர்பூல் அணி பிடிக்கும் என கூறிய எம்பாப்பே, ஏற்கனவே அந்த அணியுடன் பேசியதாக கூறியது தற்போது தெரிய வந்துள்ளது.
கைலியன் எம்பாப்பே
பிரான்ஸ் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே PSG அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு சீசன் முடிவில் அவரின் ஒப்பந்தம் காலாவதி ஆகிறது.
ஆதலால், ரியல் மாட்ரிட் மற்றும் லிவர்பூல் அணிகள் அவரை இணைத்து கொள்ள போட்டியிடுகின்றன.
இதில் ரியல் மாட்ரிட் அணியின் ஒப்பந்த முயற்சியை எம்பாப்பே விரும்பவில்லை என்றும், அதன் முன்மொழிவை அவர் நிராகரித்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
@Getty
இதற்கிடையில், PSG அணியின் லாயல்டி போனஸை (ரூ.730 கோடி) கைவிடவும் எம்பாப்பே தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
தாயாருக்கு பிடித்த அணி
இந்த நிலையில் தனது தாயாருக்கு பிடித்த அணி லிவர்பூல் தான் என்று அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து 2022யில் அவர் பேசியபோது, 'நாங்கள் (livarpool) கொஞ்சம் பேசினோம், ஆனால் அதிகமாக இல்லை. ஏனென்றால் அது என் அம்மாவுக்கு பிடித்த கிளப். அவர் liverpool-ஐ விரும்புகிறார். ஏன் என்று எனக்கு தெரியாது.
நீங்கள் அவரிடம் தான் அதை கேட்க வேண்டும். இது ஒரு நல்ல கிளப். நாங்கள் அவர்களை 5 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தோம். நான் மொனாக்கோவில் இருந்தபோது அவர்ளை சந்தித்தேன். இது ஒரு பெரிய கிளப்' என தெரிவித்தார்.
@Getty Images
சாத்தியக் கூறுகள்
இதனால் எம்பாப்பே லிவர்பூல் அணியில் இணையவே அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிகிறது.
மேலும், பிரீமியர் லீக்கிற்கான சாத்தியமான நகர்வை இப்போது அவர் ஆராய்ந்து வருகிறார்.
இது அந்த அணி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனிடையே, ரியல் மாட்ரிட் தரப்பு ஜனவரி 15 வரை எம்பாப்பேவுக்கு காலக்கெடு வழங்கியதாக கூறப்படுகிறது.
@PSG
Twitter (@PSG_inside)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |