இளவரசர் ஹரி காதலித்த உண்மையான இளவரசி: இவர் எந்த நாட்டு இளவரசி தெரியுமா?
இளவரசர் ஹரி தன் திருமணத்துக்குமுன் பல பெண்களைக் காதலித்தவர் என்பது உலகத்துக்கே தெரிந்த விடயம்.
அவர் ஒரு இளவரசியையும் காதலித்துள்ளார் என இப்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அவர் எந்த நாட்டு இளவரசி?
இளவரசர் ஹரி காதலித்த அந்த இளவரசியின் பெயர் Princess Marie-Olympia of Greece and Denmark (26) - சுருக்கமாகச் சொன்னால் ஒலிம்பியா.
இந்த ஒலிம்பியா கிரீஸ் நாட்டு பட்டத்து இளவரசரான Pavlos, இளவரசி Marie-Chantal தம்பதியரின் மகள் ஆவார். ஆனால், 1974இல் கிரீஸ் நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டுவிட்டது.
இந்த ஒலிம்பியா தற்போது பிரபல மொடலாக திகழ்கிறார்.
Credit: Getty
காதலியைப் பிரிந்ததும் மீண்டும் தோன்றிய காதல்
இளவரசர் ஹரி 2014ஆம் ஆண்டு தனது காதலியான Cressida Bonasஐப் பிரிந்திருந்த நேரத்தில், இளவரசி பீட்ரைஸ், ஹரிக்கு ஒலிம்பியாவை அறிமுகம் செய்துள்ளார்.
வெகு சீக்கிரமாகவே இருவரும் காதலிக்கத் துவங்கிவிட்டார்களாம். அவர்களுடைய காதலுக்கு இளவரசர் வில்லியமும், இளவரசி கேட்டும் கூட சம்மதம் தெரிவித்துவிட்டார்களாம்.
இன்னொரு முக்கிய விடயம், மன்னர் சார்லஸ்தான் ஒலிம்பியாவின் ஞானத்தந்தை!
ஒலிம்பியாவுக்கும் ஹரிக்கும் இடையிலான காதல் குறித்த செய்திகள் வரத்துவங்கி சிறிது காலத்துக்குள்ளேயே, மேகன் குறித்த செய்திகள் வெளிவரத்துவங்கின.
அப்போது அரண்மனை வட்டாரம் இளவரசர் ஹரிக்கும் ஒலிம்பியாவுக்கும் இடையில் காதல் இருந்த விடயத்தையே மறுத்துவிட்டதாம். அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும்போது, அது அர்த்தமற்ற விடயம், அதில் கொஞ்சம் கூட உண்மையே இல்லை என்றாராம்!
Credit: PA:Press Association

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.