ரூ.15,000-த்தில் IP69 பாதுகாப்புடன் Realme 14X ஸ்மார்ட்போன் அறிமுகம்
சீன தொழில்நுட்ப நிறுவனமான ரியல்மி (Realme) இன்று (டிசம்பர் 18) தனது புதிய Realme 14X ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது.
Realme நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடக தளங்களில் Realme 14X-ன் டீசரை வெளியிட்டதன் மூலம், அதன் launch Event மற்றும் சில தகவல்களை வெளியிட்டது.
இந்த ஸ்மார்ட்போன் 45W சார்ஜிங் ஆதரவுடன் 6000mAh பேட்டரியைப் பெறும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தவிர, Realme 14X-ல் ரூ.15,000 விலை வரம்பில் முதல் முறையாக, இந்த ஸ்மார்ட்போன் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP69 rated protectionஐ பெறும் என்று ரியல்மி கூறியுள்ளது.
இது தவிர, நிறுவனத்திடமிருந்து ஸ்மார்ட்போன் குறித்து எந்த தகவலும் பகிரப்படவில்லை. இருப்பினும், கிட்டத்தட்ட அதன் அனைத்து விவரக்குறிப்புகளும் ஊடக அறிக்கைகளில் கசிந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Realme 14x 5G launch