நம்ப முடியாத அம்சங்களுடன் வரவுள்ள Realme GT 5G Master Edition போன்!
ரியல்மி அதன் ஜிடி தொடரில் ரியல்மே ஜிடி 5 ஜி மாஸ்டர் எடிஷன் (Realme GT 5G Master Edition) என பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
மாடல் எண் RMX336 உடன் TENAA சான்றிதழில் தோன்றிய சாதனம் Realme X9 அல்ல, உண்மையில் அது Realme GT Master Edition-ஆக அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த போனின் விவரக்குறிப்புகள் (Specifications) சமீபத்தில் கசிந்தன.
இதில் பின்புறத்தில் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. கூடுதலாக 13 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த போனில் 90Hz refresh rate 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும். இதில் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 SoC இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், Realme GT 5G Master Edition-ல் 4,500 எம்ஏஎச் பேட்டரி இருக்கும் என்றும் இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ரியல்மி நிறுவனம் உண்மையில் இதுவரை Realme GT 5G Master Edition-ஐ உறுதிப்படுத்தவில்லை. ஆனால், ரியல்மே துணைத் தலைவர் Xu Qi Chase தனது சமுகில வலைதள பக்கத்தில் ஒரு புதிய ஸ்மார்ட்போனின் படத்தை வெளியிட்டார், அதில் ஜப்பானிய வடிவமைப்பாளர் Naoto Fukasawa இருந்தார்.
Fukasawa முன்னதாக ரியல்மியின் பிற மாஸ்டர் எடிஷன் போன்களை வடிவமைக்க பணிபுரிந்தவர் என்பதால், Realme GT 5G-யின் Master Edition போன் வெளிவரும் என நம்பப்படுகிறது.