வெறும் 6,990 ரூபாய்க்கு இவ்வளவு இருக்கா? செம ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள பிரபல நிறுவனம்!
பிரபல சீன நிறுவனமான Realme தன்னுடைய பயனாளர்களை உலக அளவில் தக்க வைத்துக் கொள்ள, பல்வேறு விதமான ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்த நிறுவனம் பட்ஜெட் போன் முதல் காஸ்ட்லி போன் வரை என பல சிறப்பம்சங்களுடன் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இப்போது இந்த நிறுவனம் பட்ஜெட் விலையில் வாங்க நினைக்கும் பயனாளர்களுக்கு ஒரு செம ஸ்மார்ட் போனை வெறும்(Realme C11 20201) 6,990 ரூபாய்க்குள் அறிமுகம் செய்துள்ளது.
இதை C series-ஆக வெளியிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் போன் ரியல் மீ, பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் கிடைக்கிறது
.Realme C11 20201 சிறப்பம்சங்கள்
இந்த போன் 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட வசதியுடன் வருகிறது.
இதில் 3 சிம் கார்ட் சிலாட் உள்ளது. அதில் இரண்டு சிம்கார்டுகள் மற்றும் 1 microSD பயனப்டுத்திக் கொள்ளலாம்.
5000mAh பேட்டரியுடன் வரும் இந்த போன் 6.5-inch திரை கொண்டது. இதில் ஆக்டோ கோர் புராசசர் தான் பயன்படுத்தப்பட்டுள்ளதாம், மேலும் முன்பக்க கமெரா 8 மெகா பிக்சலுடன் வருகிறது.