விரைவில் அறிமுகமாகும் Realme Narzo 50 சீரிஸ் Smartphoneகள்! சூப்பரான அம்சங்கள்... அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்குமாம்
ரியல்மி நார்சோ 50 சீரிஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் அதன் விலை மற்றும் அசத்தலான அம்சங்கள் குறித்து தெரியவந்துள்ளது.
இருப்பினும் இந்த சீரிஸில் எத்தனை வகை ஸ்மார்ட்போன்கள் இருக்கும் என்பது பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. இது குறித்து ரியல்மி இந்தியா மற்றும் ஐரோப்பாவின் சந்தைப்படுத்தல் தலைவரான பிரான்சிஸ் வோங்கின் சமூகவலைதள பதிவில், எங்கள் வரவிருக்கும் #realmeNarzo50A -ல் 1GHz GPU & HyperEngine மேம்பாடுகளுடன் MediaTek Helio G85 செயலியை பெற்றுள்ளது.
உகந்த மற்றும் நம்பகமான செயலியாக இருப்பதால், இது இப்போதுள்ள இளம் சமுதாயத்திற்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று நான் நம்புகிறேன். #நர்சோ 50 சீரிஸ் விரைவில் வருகிறது! " என்று எழுதியுள்ளார். இந்த சாதனம் தற்போதுள்ள Narzo 30A-வை போலல்லாமல், இந்தியாவில் ரூ.8,999 க்கு கிடைக்கும் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்தியாவில் நார்சோ 50 சீரிஸின் விலை ஒரே மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதுவும், அனைவரும் வாங்கக்கூடிய விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பு வெளியான தகவல்களின் படி, நார்சோ 50A-வில், 13 மெகாபிக்சல் கேமராவுடன் F1.8 லென்ஸ் மற்றும் 1/3-இன்ச் சென்சார் ஆகியவை இருக்க வாய்ப்புள்ளது. இந்த சென்சாரின் அதிகப்பட்ச ரிசலுஷன் 4080x3072 பிக்சல்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் கேமராவுடன் F2.0 துளை, 1/3.6 இன்ச் சென்சார் மற்றும் அதிகப்பட்சமாக 3264x2448 பிக்சல் போட்டோ ரிசலுஷன் ஆகியவை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ரியல்மி நிறுவனம் கடைசியாக வெளியிட்ட நார்சோ சீரிஸானது, நார்சோ 30 ஏ, நார்சோ 30 மற்றும் நார்சோ 30 ப்ரோ ஆகியவை ஆகும். அப்படி பார்த்தால், வரயுள்ள ஸ்மார்போன் சீரிஸுக்கு நிறுவனம் நார்சோ 40A, நார்சோ 40, மற்றும் நார்சோ 40 Pro என்று தான் பெயரிட்டிருக்க வேண்டும்.
ஆனால், அது சாத்தியமில்லை, ஏனெனில் சீன எண் கணிதத்தில் எண் 4 என்பது அசுபமாகக் கருதப்படுகிறது. அதாவது ராசியற்றதாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் ரியல்மி எண் 50-ஐ தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த மொபைல் சீரிஸ் வெளியான பிறகே இதன் அம்சங்கள் மற்றும் விலை குறித்து அதிகாரப்பூவாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.