iPad-க்கு போட்டியாக களமிறங்கும் Realme Pad! அறிமுகத்திற்கு முன்பே வெளியான விவரக்குறிப்புகள்.!
Realme Pad-ன் அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்கு முன்னதாகவே, அதன் கேமரா மற்றும் பேட்டரி விவரக்குறிப்புகள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.
பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ரியல்மி (Realme), அதன் முதல் Tablet-ஐ ரியல்மி பேட்(Realme Pad) என்ற பெயரில் இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த Realme Pad, இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் iPad-க்கு போட்டியாக மிக குறைந்த விலையில், பல புதிய அம்சங்களுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்,அதிகாரப்பூர்வமாக வெளிவிடுவதற்கு முன்னதாகவே, Realme Pad-ன் சில முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, Realme Pad முன் மற்றும் பின் பக்கங்களில் 8 மெகாபிக்சல் கேமராவை கொண்டிருக்கும், இதனால் முன்னெப்போதையும் விட வீடியோ கால் பேச,மக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், அதன் அதிக நேர பயன்பாட்டிற்காக அதில் 7000mah பேட்டரி வசதியைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Realme Pad, ஆப்பிள் நிறுவனத்தின் iPad போன்று தட்டையான பக்கங்களுடன், சுற்றி ஒரு உலோக பூச்சு பூசப்பட்டு, பின்புறத்தில் ஒரு கேமரா மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், ரியல்மி பேட் ஆப்பிள் ஐபேடிற்கு நேரடி போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
மீண்டும் ஐரோப்பிய சந்தைக்கான தனது GT 5G மாடல் ஆண்ட்ராய்டு போன் வெளியீட்டு நிகழ்வில், ரியல்மி இந்த ஆண்டு Realme Pad-ஐ அறிமுகப்படுத்துவதாக ஏற்கனவே கூறியது.
அதன்படி,டேப்லெட் மட்டுமல்லாமல், நிறுவனம் ‘ரியல்மி புக்’ என்று அழைக்கப்படும்,தனது முதல் லேப்டாப் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.
இதனால், ரியல்மி பேட் மற்றும் ரியல்மி புக் ஒரே நேரத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால்,தேதி குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.