பிரித்தானியருக்கு பிரான்ஸ் குடியுரிமை மறுப்பு: காரணம் இதுதான்
ஓய்வு பெற்ற பிரித்தானிய விரிவுரையாளர் ஒருவருக்கு அவரது வருவாயைக் காரணம் காட்டி பிரெஞ்சு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியருக்கு பிரான்ஸ் குடியுரிமை மறுப்பு
தென்மேற்கு பிரான்சில் வாழ்ந்துவரும் பிரித்தானியர் ஒருவர் பிரெஞ்சுக் குடியுரிமை கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், அவரது ஓய்வூதியம், அவர் பிரித்தானியாவில் செய்த வேலையின் அடிப்படையில் உள்ளதால் அவரது குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு ஒன்றிலிருந்து தனது வருவாயின் பெரும் பகுதியைப் பெறுபவர்களுடைய விருப்பங்கள் பிரான்சை மையமானதாக கொண்டதாக இல்லை என்பதை அவர்களுடைய சூழல் காட்டுவதாகக் கூறி, இப்படி சிலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர், தான் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், பிரான்சுடனான தனது உறவு குறித்து விளக்க தனக்கு தற்போது வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும், தான் வழக்கில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதாவது, குடியுரிமை விண்ணப்பப் படிவத்தில், தனது விளக்கத்தை அளிப்பதற்கான இடம் கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ள அவர், மேல்முறையீட்டின்போது தனது ஓய்வூதியம் குறித்தும் தனக்கும் பிரான்சுக்கும் உள்ள உறவு குறித்தும் தன்னால் விளக்கமுடியும் என்றும் அதனால் தனக்கு குடியுரிமை கிடைக்க வாய்ப்புள்ளது என தனது சட்டத்தரணி கூறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |