என்ன ஆயிற்று கனேடியர்களுக்கு? 50 வயதானதும் திருமண வாழ்வில் எடுக்கும் முடிவு
இளம் வயதில் தம்பதியருக்குள் கருத்துவேறுபாடுகள் ஏற்படும், ஒரு கட்டத்தில் அது விவாகரத்துவரை சென்றுவிடுவதுண்டு.
ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல், என்ன வந்தாலும் சரி, மீதி வாழ்க்கையை அப்படியே ஓட்டிவிடலாம் என வாழ்பவர்கள் பலர் உண்டு.
ஆனால், இன்று அந்த நிலை மாறிவருகிறது. கனடாவைப் பொருத்தவரை, 50 வயது தாண்டியவர்கள் விவாகரத்து செய்வது அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
50 வயது தாண்டியதும் விவாகரத்து செய்யும் கனேடியர்கள்
இப்படி 50 வயதுக்கு மேல் விவாகரத்து செய்வது, grey divorce என அழைக்கப்படுகிறது.
சமீப காலமாக இப்படி 50 வயதை தாண்டியவர்கள் விவாகரத்து செய்வது அதிகரித்துள்ளதாக கருதப்பட்டாலும், ஒருவகையில் பார்த்தால், விவாகரத்து மன நிலைமை எப்போதுமே இருந்துள்ளது என்றும் கூறலாம்.
ஏனென்றால், 1986இல் சராசரி திருமண வயது 25. தம்பதியர் சராசரியாக 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தார்கள்.
2020இல் சராசரி திருமண வயது 31. தம்பதியர் சராசரியாக 15 ஆண்டுகள் இணைந்து வாழ்கிறார்கள். ஆக, விவாகரத்து செய்யும் வயது சுமார் 50 ஆக உயர்ந்துள்ளது எனலாம்.
என்ன காரணம்?
இப்படி 50 வயதுக்கு மேல் விவாகரத்து செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. மனிதனின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது, சொந்தக்காலில் நிற்கும் அளவுக்கு வசதி, குறிப்பாக பெண்களிடையே.
விவாகரத்து செய்தவர்கள் சமுதாயத்தில் இகழ்வாக பார்க்கப்பட்ட நிலை மாறியுள்ளதும் ஒரு முக்கிய காரணம்.
ஆக, தங்கள் தற்போதைய உறவு தங்கள் தேவைகளை சந்திக்கவில்லையென்றால், அதை விட்டு விட்டு புதிய வாழ்வை துவக்க இப்போது தயங்குவதில்லை மக்கள்.
இப்படி 50 வயதுக்கு மேல் விவாகரத்து செய்துகொள்வதால் நிதி நிலைமை உட்பட பல பிரச்சினைகள் உள்ளன என்பதை மறுக்கமுடியாது.
ஆனால், தங்கள் தனிப்பட்ட நிறைவான மற்றும் மகிழ்ச்சியான புதிய வாழ்வை ஒப்பிடும்போது, இந்த கஷ்டங்கள் எல்லாம் பெரிதாக தெரிவதில்லை என்கிறார்கள் அந்த பாதையில் பயணிக்கும் பலர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |