பிரித்தானியாவை விட்டு வெளியேறிவரும் இந்திய மருத்துவர்கள்: காரணம் என்ன?
வரலாறு, உணவு, கட்டிடக்கலை போன்ற விடயங்களில் இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்குமான தொடர்பைப் போலவே மருத்துவத்துக்கும் நீண்ட கால தொடர்பு உள்ளது.
சொல்லப்போனால், சொந்த நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு பணிக்கு செல்ல மருத்துவர்கள் முடிவெடுத்தால், அதில் பிரித்தானியாவுக்குதான் முதல் இடம் இருக்கும்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின், 1948ஆம் ஆண்டு பிரித்தானிய மருத்துவ அமைப்பான NHS உருவானபோது, அதில் இந்தியாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
அத்துடன், இந்திய மருத்துவத்துறை பிரித்தானிய மருத்துவ அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டதும் உண்டு.
ஆனால், இன்று பிரித்தானியாவில் பணி புரிந்துவரும் இந்திய மருத்துவர்கள் பலர் வேறு நாடுகளுக்கும், சொல்லப்போனால், மீண்டும் தங்கள் தாய்நாட்டுக்கும் திரும்பிவருகிறார்கள்.
காரணம் என்ன?
இப்படி இந்திய மருத்துவர்கள் பலர் வேறு நாடுகளுக்கு செல்லத் துவங்கியுள்ளதற்கு முக்கியக் காரணம், தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் பல அரசுகள் புலம்பெயர்தலைக் குறைப்பது என கங்கணம் கட்டிக்கொண்டுள்ளன.
உண்மையில் சட்டப்படியான புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது கடினம் என்றாலும், அரசின் புலம்பெயர்தல் கொள்கைகள் மருத்துவர்கள் உட்பட சட்டப்படி புலம்பெயர்ந்தோர் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்கிறார் NHS அமைப்பில் கதிரியக்கத் துறை நிபுணராக பணியாற்றும் சஞ்சய் காந்தி என்னும் மருத்துவர்.

இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், பிரித்தானியாவில் மருத்துவர்களாக பயிற்சி பெற்று வருகிறார்கள் பலர்.
ஆனால், அவர்களுக்கு வேலை கொடுப்பதற்காக புதிதாக மருத்துவர் பதவியிடங்கள் உருவாக்கப்படுவதில்லை.
ஆகவே, போட்டி ஏற்படுகிறது, வெளிநாட்டிலிருந்து வந்த மருத்துவர்களுக்கு வேலை கிடைப்பது கடினமாகிவிடுகிறது.
மேலும், வெளிநாட்டிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்து வேலை செய்ய விரும்பும் மருத்துவர்கள், PLAB (Professional and Linguistic Assessments Board) என்னும் தேர்வை எழுதி வெற்றிபெறவேண்டும்.
அது செலவு அதிகம் பிடிக்கும் ஒரு தேர்வு ஆகும். அதை எழுதி வெற்றிபெற்றாலும் வேலை கிடைப்பது கடினமாக உள்ளது.
ஆக, வேலை கிடைப்பது கடினம், வேலை கிடைத்தாலும், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது ஊதியம் குறைவு, உள்ளூர் மருத்துவர்களின் போட்டி, மருத்துவர்களுக்கு விதிக்கப்படும் வரிகள், வாழ்கைத்தரம் முதலான காரணங்களால் இந்திய மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவருகிறார்கள்.
அவுஸ்திரேலியா, கனடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், நல்ல ஊதியம், உயர்ந்த வாழ்க்கைத்தரம் மற்றும் நீண்ட கால பணிக்குத் திட்டமிட முடிதல் ஆகிய நன்மைகள் கிடைப்பதால் இந்திய மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறி இந்த நாடுகளுக்கு செல்லத் துவங்கியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |