கனடாவில் இந்தியர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்? காரணம் என்ன
கனடாவிற்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் அங்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மாணவர்கள்
சமீபத்தில் கனடாவின் Prince Edward Island மாகாணம், வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை 25 சதவிகிதம் குறைக்க இருப்பதாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, இந்திய மாணவர்கள் பலர் அங்கு ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர். மேலும், ஏற்கனவே அங்கு இருக்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.
முதல் காரணம் மருத்துவ செலவுகள் அதிகரிப்பதாகும். ஒட்டுமொத்த மாகாணத்தில் மருத்துவ செலவுகள் வரி உள்ளிட்டவை மக்களிடம் இருந்தே வசூலிக்கப்படும்.
வெளிநாட்டவர் அதிகம் வருவதால் அது மருத்துவ கட்டமைப்பில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்களாம். மேலும் காத்திருப்பு காலமும் அதிகமாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அதாவது அரசின் Healthcare கீழ் அறுவைசிகிச்சை மேற்கொள்வோர் அதிக காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை
இரண்டாவது காரணம், வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது அங்குள்ள வீடுகளின் விலை மின்னல் வேகத்தில் எகிற காரணமாக அமைந்துள்ளதாம்.
இதனால் நடுத்தர மக்கள் சொந்தமாக வீடுகள் வாங்க முடியாத சூழல் இருக்கிறது என்றும், வாடகையின் விலை கூட பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
2013ஆம் ஆண்டுக்கு பிறகு கனடா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |