சர்ச்சையை கிளப்பும் ஷேன் வார்ன் மரணம் - முன்கூட்டியே கணித்தாரா?
அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், அந்த சம்பவம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் மாரடைப்பால் காலமானதாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் ஷேன் வார்ன் 1992ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டு வரை அவுஸ்திரேலிய அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். அவர் 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளையும், 194 ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்த வார்னின் திடீர் மறைவு பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. குறிப்பாக கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதியன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இளமையான தோற்றத்தில் கட்டுமஸ்தான உடற்கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார்.
அதில் ஜூலை மாதத்திற்குள் கடும் உடற்பயிற்சி மூலம் இதே நிலைமைக்கு திரும்பப்போகிறேன் எனவும், ஆபரேஷன் ஷ்ரெட் தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் 50 வயதை கடந்துவிட்ட ஷேன் வார்ன் தனது உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் தீவிர உடற்பயிற்சி மற்றும் டயட் ஆகியவை இருந்து வந்ததால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆகவே அவரது மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Operation shred has started (10 days in) & the goal by July is to get back to this shape from a few years ago ! Let’s go ???? #heathy #fitness #feelgoodfriday pic.twitter.com/EokgT2Hyhz
— Shane Warne (@ShaneWarne) February 28, 2022