'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயர் வைத்ததற்கு பின்னால் இருக்கும் காரணம் தெரியுமா?
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
ஆபரேஷன் சிந்தூர்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதனால் காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் நிலவியுள்ளது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலின் போது 25 பெண்களின் கணவர்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சிந்தூர் என இந்தியில் அழைக்கப்படும் சிவப்பு பொட்டை இழந்த பெண்களுக்கு நீதி கிடைப்பதற்காக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |