சட்டவிரோத குடியேறிகளை செலவழித்து ட்ரம்ப் அனுப்புவது ஏன்? இதுதான் காரணம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ராணுவம் விமானம் மூலமாக திருப்பியனுப்புவது குறித்த கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.
சட்டவிரோதமாக குடியேறிகள்
அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என தேர்தல் பரப்புரையையில்முழக்கமிட்ட ட்ரம்ப், வெற்றி பெற்று பதவியேற்ற பின்னர் சட்டவிரோதமாக குடியேறியவர்களை திரும்பியனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இந்தியர்கள் 119 பேரை அமெரிக்க ராணுவ விமானம் ஏற்றிக்கொண்டு அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.
இதற்கிடையில், ராணுவ விமானங்களை ஏன் ட்ரம்ப் இந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறார் என்ற கேள்வி பலருக்கு எழுந்தது.
அதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. அமெரிக்க பொதுவாக வணிக விமானங்கள் மூலம் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துகிறது. இவை வழக்கமான பயணிகள் விமானங்களைப் போன்றவை என்று கூறப்படுகிறது.
அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கம் இவற்றை இயக்குகிறது. ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின், இந்த பணிக்காக இரு C-17 மற்றும் இரண்டு C-130E விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மிகவும் விலை உயர்ந்த பயணம்
ஆனால், ICE சார்ட்டர் விமானங்களை விட ராணுவ விமானங்களைப் பயன்படுத்துவது மிகவும் விலை உயர்ந்தது.
சமீபத்தில் கவுதமாலாவிற்கு 10 மணிநேர ராணுவ நாடு கடத்தல் செய்வததற்கு, ஒருவருக்கு குறைந்தது 4.07 லட்சம் ரூபாய் விமானத்தின் செலவு ஆனது.
அதே சமயம், அமெரிக்கன் ஏர்லைன்ஸில் அதே வழித்தடத்தில் ஒரு வழி முதல் வகுப்பு டிக்கெட்டின் விலை சுமார் 73,886 ரூபாய்தான். இதன்மூலம் ஒரு சட்டவிரோத குடியேறிக்கு அமெரிக்கா ஐந்து மடங்கு செலவு செய்கிறது என்பது தெரிய வருகிறது.
C-17 ராணுவ விமானத்தை இயக்க ஒரு மணி நேரத்திற்கு 24,00,000 செலவாகும். அப்படியானால், இந்தியவிற்கு பயணம் நேரம் 12 மணிநேரத்திற்கும் மேல் என்பதால், ஒரு விமானத்திற்கு 2.88 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவு செலவு செய்து அனுப்புவதன் மூலம் ட்ரம்ப் தனது நாட்டு மக்களுக்கும், உலகிற்கும் ஒரு செய்தியைத்தான் கூற விரும்புகிறார்.
அதாவது, சட்டவிரோத குடியேறிகளை "அந்நியர்கள்", "குற்றவாளிகள்" என்று கூறும் ட்ரம்ப் அரசு, கை மற்றும் கால்களை விலங்கிட்டு அனுப்புவதன் மூலம் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுப்போம் என மறைமுகமாக தெரிவிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |