விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டதற்கான காரணம் இதுதான்

Vijayakanth
By Raju Jun 23, 2022 12:05 PM GMT
Report

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் இருந்து மூன்று விரல்கள் அகற்றப்பட்டது குறித்து மருத்துவர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

சர்க்கரை அளவு அதிகமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் இருந்து மூன்று விரல்கள் அகற்றப்பட்டது. தற்போது இதற்கான காரணம் என்ன என்பதை மருத்துவர் ஒருவர் விளக்கியுள்ளார்.

அவர் கூறுகையில், 'சர்க்கரை நோயை பொறுத்தவரை ரத்தக்குழாய்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மிக முக்கியமாக கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோய் மூலம் பாதிப்பு ஏற்படும். நீரிழிவு நோயை நாம் கட்டுக்குள் வைத்திருக்காவிடில் பாத நோய்கள், ரத்த நாளங்களில் வரக்கூடிய பாதிப்புகளால் பாதத்தின் தசைகள் அழிய ஆரம்பிக்கும்.

அதுபோன்ற சமயங்களில் சிலருக்கு தோல் அல்லது நகம் அல்லது விரல் பாதிக்கலாம். சிலருக்கு முழுவதுமாக கால் பாதிக்கப்படலாம். எனவே சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருந்தால் இந்த பாதிப்புகள் வருவது மிக மிக குறைவு. விஜயகாந்த் நோயை கட்டுக்குள் வைத்திருக்காமல் இருந்திருக்கலாம்.

இந்த நோயை கட்டுக்குள் வைத்திருந்தால் ரத்த குழாய்களில் பாதிப்பு ஏற்படாது. அதனால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். எனவே திசுக்களுக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன் தடைபடாமல் இருக்கும்.

விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டதற்கான காரணம் இதுதான் | Reason Behind Vijayakanth Fingers Remove

மேலும், ரத்த ஓட்டம் சீராக இல்லை என்ற நிலையில் தொற்று ஏற்படும் போது பாதிப்பு அதிகமாகும். நீரிழிவு நோயாளிகளை பொறுத்தவரை தொற்று எளிதில் வந்துவிடும். தொற்றானது மீண்டும் ரத்தத்தில் பரவி, உடல் முழுவதும் செல்லாமல் இருக்க அந்த உறுப்பை எடுக்க வேண்டியிருக்கும்.

இதுதான் விஜயகாந்திற்கு நடந்தது என நினைக்கிறேன். நீரிழிவு நோயாளிகள் முறையான மருத்துவம், சரியான வாழ்வியல் மாற்றம், நிறைவான உணவு முறை இது மூன்றையும் சரியாக கடைபிடித்தால், இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார்.  

விஜயகாந்த் கால் விரல்கள் அகற்றம்! சர்க்கரை நோயாளிகளின் முக்கிய கவனத்திற்கு 

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US