5 பில்லியன் மதிப்பு பிரம்மாண்ட விமான நிலையம்: அவுஸ்திரேலியாவில் காலியாக இருப்பது ஏன்?
அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி விமான நிலையம் ஒரு வருட காலமாக காலியாகவே உள்ளது.
ஒப்பந்தங்கள்
அவுஸ்திரேலியாவில் மேற்கு சிட்னி சர்வதேச விமான நிலையம் 5 பில்லியன் டொலர்கள் மதிப்பில் அமைக்கப்பட்டது.
ஆனால், இந்த புதிய பயணிகள் விமான நிலையம் திறக்கப்பட்டாலும் ஓர் ஆண்டாக காலியாக இருக்க உள்ளது. ஏனெனில் அதற்கு எந்த வணிக விமான ஒப்பந்தங்களும் இல்லை.
சண்டே டெலிகிராப்பின்படி, விமான நிலையம் இதுவரை சரக்கு விமான நிறுவனங்களுடன் மட்டுமே ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது.
அதன் ஓடுபாதைகள் 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து செயல்படும். ஆனால் பயணிகள் CBDக்கு எவ்வளவு எளிதாகப் பயணிக்க முடியும் என்பது குறித்த கவலைகள் காரணமாக, முக்கிய விமான நிறுவனங்கள் ஒப்பந்தங்களை செய்வதைத் தடுத்து நிறுத்தியுள்ளன.
மெட்ரோ சேவை
இதற்கிடையில், புதிய மெட்ரோ சேவை விமான நிலையத்துடன் திறக்கப்படவிருந்தது. ஆனால் 2027ஆம் ஆண்டின் பிற்பகுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதாவது ரயில் போக்குவரத்து இல்லாமல் விமான நிலையம் திறக்கப்படும். NSW போக்குவரத்து அமைச்சர் ஜான் கிரஹாம், "மேற்கு சிட்னி விமான நிலையத்தில், ஒரு விமானம் தரையிறங்குவதற்கு முன்பே நாங்கள் உலகத் தரம் வாய்ந்த மெட்ரோவை உருவாக்கி வருகிறோம்" என்றார்.
அதே சமயம், மெட்ரோ எப்போது இயங்கத் தொடங்கும் என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |