வழக்கத்துக்கு மாறாக பொது இடங்களில் நெருக்கம் காட்டும் வில்லியம் கேட் தம்பதி: காரணம் என்ன?
பொதுவாக, இளவரசர் ஹரி மேகன் தம்பதியரைப்போல, இளவரசர் வில்லியமும் கேட்டும் பொது இடங்களில் நெருக்கம் காட்டுவதில்லை. ஆனால், தற்போது வழக்கத்துக்கு மாறாக பொது இடங்களில் நெருக்கம் காட்டத் துவங்கியிருக்கிறார்கள் இளவரசர் வில்லியமும் கேட்டும்.
வழக்கத்துக்கு மாறாக
Thank you, Pontypridd! 👋🏴
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) February 26, 2025
Diolch, Pontypridd! 👋🏴 pic.twitter.com/0eAEePs48w
சமீபத்தில் வேல்ஸ் நாட்டிற்குச் சென்றிருந்த வில்லியமும் கேட்டும், இறுகக் கைகளைப் பற்றிக்கொண்டபடி நடக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளன. இணையவாசிகள் அந்த காட்சியை நம்ப முடியாமல் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
அத்துடன், நீங்கள் கைகளைக் கோர்த்தபடி செல்லும் காட்சிகள் அருமையாக இருக்கின்றன என்றும், இந்த வீடியோவை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன் என்னும் ரீதியிலும் தம்பதியரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
எழுந்துள்ள விமர்சனம்
பொதுவாக ராஜ குடும்பத்தில் தம்பதியர் பொது இடங்களில் இப்படி நெருக்கம் காட்டுவதில்லை. அதற்கு ஒரே விதி விலக்கு, இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும்தான்.
அமெரிக்காவில் வாழும் ஹரி மேகன் தம்பதி, இப்படித்தால் கைகளைக் கோர்த்துக்கொண்டும், விளையாட்டு நிகழ்ச்சிகளைக் காணும்போது கொஞ்சிக்கொண்டும் இருக்கும் காட்சிகள் சமீபத்தில் வெளியாகியது நினைவிருக்கலாம்.
ஆக, வில்லியம் கேட் தம்பதி, ஹரி மேகன் தம்பதியரைப் பார்த்து அவர்களைப்போல நடந்துகொள்ள முயற்சிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
அதே நேரத்தில், இளவரசி கேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் அனுபவித்த கஷ்டங்கள் அவரில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம்.
அதனால் அவர் தன் கணவருடன் நெருக்கம் காட்டக்கூடும். அது மற்றவர்கள் பார்ப்பதற்காக அல்லாமல், அவரது பர்சனல் விடயமாகக்கூட இருக்கலாம் என்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |