49 வயதில் பிரபல பாடகர் மரணம்..காரணம் கூறும் மருத்துவர்கள்
பம்பா பாக்யா தன்னை மற்ற பாடகர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள முண்டாசு கட்டி வலம் வந்தவர்
அண்மையில் பம்பா பாக்யா பாடிய பொன்னி நதி பாடல் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது
உணவுக் கட்டுப்பாடு, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்காமை போன்ற காரணங்களால் பம்பா பாக்யாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா தனது 49வது வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசைக்குழுவில் பாடகராக இருந்த பாடகர் பம்பா பாக்யா சில பாடல்களே பாடியுள்ளார்.
மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில்,
'தினசரி எளிய உடற்பயிற்சி, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருத்தல், உணவுக் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை பின்பற்றாத காரணத்தினால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம்' என தெரிவித்துள்ளனர்.