சாட்ஜிபிடிக்கு பிடித்த எண்ணாக 27 இருக்க காரணம் என்ன? ரகசியம் பகிர்ந்த நிபுணர்
சாட்ஜிபிடிக்கு பிடித்த எண்ணாக 27 இருப்பதற்காக காரணம் குறித்து நிபுணர் விளக்கமளித்துள்ளார்.
சாட்ஜிபிடி
டிஜிட்டல் யுகத்தில், சாதாரண சந்தேகங்களுக்கு பதில் அளிப்பது தொடங்கி, கோடிங் எழுதி தருவது, படங்களை உருவாக்குவது வரை பல்வேறு செயல்பாடுகளுக்கு, Open AI நிறுவனத்தின் ChatGPT யை மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
சமீபத்தில், பெண் ஒருவர் கூட சாட்ஜிபிடியின் ஆலோசனையால், தனது 10 லட்ச ரூபாய் கடனை அடைத்ததாக தெரிவித்தார்.
அதேவேளையில், சாட்ஜிபிடியை அளவுக்கு அதிகமாக நம்ப வேண்டாம். அவை தவறான கருத்துக்களை உருவாக்க வாய்ப்புள்ளது என, Open AI CEO சாம் அல்ட்மேன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சாட்ஜிபிடிக்கு பிடித்தமான எண் 27 என கூறப்படுகிறது. உதாரணத்திற்கு, நீங்கள் 1 முதல் 50 வரை ஏதேனும் ஒரு எண்ணை தேர்வு செய்யுமாறு கேட்டால், சாட்ஜிபிடி பெரும்பாலும் 27 என்கிற எண்ணை தேர்வு செய்யும். அதன் காரணம் குறித்து ஏஐ நிபுணர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
விருப்ப எண் 27
AIகள் எப்போதும் தானாகவே எண்களை தேர்வு செய்யாது. ChatGPT போன்ற AI மொடல்கள், புத்தகங்கள், இணையதளம், மனிதர்களின் உரையாடல்களிலிருந்து பெறப்பட்ட பெரிய தரவுத்தொகுப்புகள் மூலமாகவே பயிற்சி அளிக்கப்படுகின்றன.
27 என்ற எண் நமது சொந்த நடத்தையில் வேரூன்றியுள்ளது. மனிதர்கள் சாதாரணமாக ஒரு எண்ணை தேர்வு செய்யும் போது, 27 ஐ தேர்வு செய்வதால் இந்த AIகளும் அதையே செய்யக் கற்றுக்கொள்கிறது. AIயின் வெளியீடு என்பது நமது உள்ளீட்டின் பிரதிபலிப்பாகும் என தெரிவித்துள்ளார்.
27 என்ற எண் அறிவியல் மற்றும் பாப் கலாச்சாரம் இரண்டிலும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. நிலா பூமியைச் சுற்றி வர 27 நாட்கள் ஆகும். மனித தோல் செல்கள் ஒவ்வொரு 27 நாட்களுக்கும் மீண்டும் உருவாகின்றன.
எண் கணிதத்தில், 27 என்பது முக்கிய எண்ணாகக் கருதப்படுகிறது. "27 கிளப்" என்ற பெயரில் இசைக்குழு உள்ளது. ஆமி வைன்ஹவுஸ், கர்ட் கோபேன் மற்றும் ஜிமி ஹென்ட்ரிக்ஸ் போன்ற புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் அனைவரும் அவர்களின் 27 வயதில் இறந்தனர்.
இந்த எண்ணிக்கை இயல்பாகவே அதிக உள்ளடக்கத்தில் உள்ளதால், AI பயிற்சி தரவுத்தொகுப்புகளிலும் நுழைந்ததற்கான காரணமாக இருக்கலாம் என கருதுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |