மைதான பராமரிப்பாளருடன் கடும் வாக்குவாதம் செய்த கம்பீர் - மோதலுக்கான காரணம் என்ன?
கௌதம் கம்பீர் ஓவல் மைதான பராமரிப்பாளருடன் வாக்குவாதம் செய்யம் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா இங்கிலாந்து ஓவல் டெஸ்ட்
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 2 போட்டிகளில் இங்கிலாந்தும், ஒரு போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது. 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
5 வது டெஸ்ட் போட்டி, வரும் 31 ஜூலை முதல் ஆகஸ்ட் 4 வரை ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
கம்பீர் வாக்குவாதம்
இந்நிலையில், இன்று ஓவல் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, மைதான தலைமை தயாரிப்பாளர் லீ ஃபோர்டிஸ்(Lee Fortis) உடன், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
VIDEO | Indian team's head coach Gautam Gambhir was seen having verbal spat with chief curator Lee Fortis at The Oval Cricket Ground in London ahead of the last Test match of the series starting Thursday.
— Press Trust of India (@PTI_News) July 29, 2025
After having drawn the fourth Test at Old Trafford, India have a chance… pic.twitter.com/hfjHOg9uPf
இந்த வீடியோவில், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லத் தேவையில்லை. நீங்கள் சென்று யாருடன் வேண்டுமானாலும் புகார் அளித்து கொள்ளுங்கள். அதனைப் பற்றி கவலையில்லை" என கம்பீர் கூறினார்.
அதன் பிறகு துடுப்பாட்ட பயிற்சியாளர் சிதான்ஷு கோடக்(Sitanshu Kotak) உள்ளே வந்து, ஃபோர்டிஸை அழைத்துச் சென்று அவருடன் உரையாடினார்.
என்ன காரணம்?
இது குறித்து பேசிய சிதான்ஷு கோடக், மைதான ஊழியர்களில் ஒருவர் வந்து, விக்கெட்டிலிருந்து 2.5 மீட்டர் தொலைவில் கயிற்றின் வெளியே நின்று பார்க்குமாறு எங்களை கூறினார்.
ரப்பர் ஸ்பைக் அணிந்து கொண்டு பார்த்தால், எந்தத் தவறும் இல்லை. மைதானம் சேதமடையவில்லை. இது ஒரு மைதானம். நீங்கள் தொட முடியாத ஒரு பழங்காலப் பொருள் அல்ல. இதற்கு எந்த புகாரும் தேவையில்லை.
இந்த ஆட்டத்திற்கு முன்பு, மைதான பராமரிப்பாளர் வேலை செய்வதற்கு எளிதான நபர் அல்ல என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது. ஆனால் இவ்வளவு இல்லை" என தெரிவித்தார்.
இது குறித்து பேசிய ஃபோர்டிஸ், "இது ஒரு பெரிய போட்டியாக வரப்போகிறது. அவருடன் (கௌதம் கம்பீர்) மகிழ்ச்சியாக இருப்பதும் இல்லாமல் இருப்பதும் என் வேலை அல்ல. இதற்கு முன்புவரை நான் அவரை சந்தித்ததில்லை" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |