நெடுஞ்சாலைகளின் நடுவே செடிகள் வளர்ப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?
பொதுவாக சாலைகளில் செல்லும்பொழுது அதற்கு நடுவே செவ்வரளி செடிகளை நீண்ட வரிசையில் நட்டுவைத்திருப்பார்கள்.
பெரும்பாலும் இதனை நாம் சாலையின் நடுவே அழகிற்க்காக வளர்க்கிறார்கள் என்று தான் நினைத்திருப்போம்.
ஆனால், அதற்கான உண்மையான காரணம் என்னவென்றால் நெடுஞ்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில் அதிகமாக வெளியேறும் கார்பன் நச்சுக்கழிவை ஆக்சிஜனாக மாற்றித்தரும் பண்பு தாவரங்களுக்கு உண்டு.
அதில் செவ்வரளி செடிக்கு இன்னும் கூடுதலாக இருக்கம். இதன் இலைகளின் அடர்த்தி தன்மை காற்றில் உள்ள கார்பன் கழிவை எளிதில் உள்வாங்கும்.
வறண்ட பகுதியில் வளரும் செவ்வரளி செடி மண் அரிப்பை கட்டுப்படுத்துவதிலும், இரைச்சல் மாசுவை கட்டுப்படுத்துவதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
இது குறிப்பாக வாகனத்தின் முகப்பு விளக்கை எதிரே வரும் வாகனத்தில் படராமால் தடுக்கிறது.
சாலைகளின் அழகிற்காக மட்டுமின்றி இதனால் தான் நெடுஞ்சாலை ஓரங்களில் செவ்வரளி செடிகள் வளர்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |