மோசமாக முத்திரை குத்தப்படும் ஹரி, மேகன்: ஏன்?
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ சம்பவத்திற்கு பிறகு, இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் இருவரும் 'பேரிடர் சுற்றுலாப் பயணிகள்' என்று ஹாலிவுட் நடிகையால் முத்திரை குத்தப்பட்டார்.
ஹரி, மேகன்
பிரித்தானிய இளவரசர் ஹரி, தனது காதல் மனைவியுடன் அரச குடும்பத்தில் இருந்து விலகி அமெரிக்காவில் குடியேறினார்.

அவர்கள் இருவரும் தங்களுக்கு நெருக்கமான நோக்கங்களை ஆதரிக்க, தொண்டு மற்றும் ஊடகத் தயாரிப்பை இணைத்து ஒரு சுதந்திரமான, முற்போக்கான பாத்திரத்தை உருவாக்கிக்கொள்ள நம்பினர்.
அதனைத் தொடர்ந்து, தங்களின் தொண்டு மற்றும் ஆதரவு முயற்சிகளுக்காக ஹரி, மேகன் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆண்டின் சிறந்த மனிதாபிமானிகளுக்கான விருது மற்றும் மதிப்புமிக்க ராபர்ட் எஃப்.கென்னடி மனித உரிமைகள் 'ரிப்பிள் ஆஃப் ஹோப்' விருது ஆகியவை அடங்கும்.
பேரிடர் சுற்றுலாப் பயணிகள்
ஆனால், லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயின்போது இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் 'பேரிடர் சுற்றுலாப் பயணிகள்' என்று முத்திரை குத்தப்பட்டனர்.

இவ்வாறு அவர்களை கூறிய ஹாலிவுட் நடிகை ஜஸ்டின் பேட்மேன், 'ஆம்புலன்ஸை துரத்துபவர்கள்' என்றும் குறிப்பிட்டார்.
ஏனென்றால், கடந்த ஜனவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரையே உலுக்கிய, பேரழிவு தரும் காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்தபோதுதான் மிக மோசமான தவறு நடந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீயினால் உறவுகளையும், வீடுகளையும் இழந்த மக்களுக்கு சசெக்ஸ் தம்பதியினர் உணவுப் பொட்டலங்களை விநியோகிப்பது, பாதிக்கப்பட்டவர்களை கட்டிப்பிடிப்பது மற்றும் பசடேனா சமூக மையத்தில் உள்ளூர் தன்னார்வலர்கள் மற்றும் அவசரகால உதவியாளர்களுடன் பேசுவது போன்றவற்றை படம் பிடித்தனர்; இது பரவலாக விமர்சிக்கப்பட்டது.
அதே சமயம், சசெக்ஸ் தம்பதியரை பசடேனா மேயர் விக்டர் கோர்டோ பாராட்டினார். அவர், "முதல்நிலை மீட்புப் பணியாளர்களின் மன உறுதியை உண்மையிலேயே அவர்கள் (ஹரி, மேகன்) உயர்த்தினர். தங்களால் முடிந்தவரை உதவியாக இருக்க விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் ஆதரவளிக்கவே விரும்புகிறார்கள்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |