மூட்டு வலி ஏற்பட காரணம் என்ன? அந்த பிரச்சினை வராமல் தடுக்க எளிய வழி இதோ
ஒரு சமயத்தில் 65 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே மூட்டு வலி பிரச்சினை இருந்து வந்தது. ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் இளம், நடுத்தர வயதினரையும் இந்த பிரச்சினை விட்டுவைப்பதில்லை.
கொஞ்சம் உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு என கவனமாக இருந்தால் மூட்டு தேய்மானத்தையும், அதனால் ஏற்படும் மூட்டுவலியையும் தவிர்க்கலாம்
மூட்டுவலிக்கான காரணங்கள்
ருமடாய்டு ஆர்த்ரைடீஸ், ஆஸ்டியோஆர்த்ரைடீஸ், கீல்வாதம், லைம் நோய், உடல்பருமன், தோல் அழிநோய் எனப்படும் லூபஸ், பலவீனம், மூட்டு தளர்வு.
தடுக்கும் முறைகள்
நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு (பச்சையாக) ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.
உணவுப்பழக்கம்
பூசணிக்காய்
பூசணிக்காயில் கரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிடுவதால், மூட்டுகளில் ஏற்படும் காயங்கள், வீக்கங்கள் மற்றும் வலிகள் போன்றவற்றை நாளடைவில் குணமாகும்.
தக்காளி
தவிர்க்க வேண்டிய முக்கிய பழம். தக்காளியின் விதைகளில் யூரிக் ஆசிட் அதிகம் உள்ளது. எனவே தக்காளியை அதிகம் சாப்பிட்டால், உடலில் யூரிக் ஆசிட்டின் அளவானது அதிகமாகி, வலியானது இன்னும் கடுமையாகிவிடும்.
மீன்
சாப்பிடவும், மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால், அவை உடலின் மூட்டுகளில் உள்ள காயங்களை குணப்படுத்தும். மேலும் அவை உடலில் உள்ள குருத்தெலும்பு திசுக்களை(Cartilage tissue) சாப்பிடும் உற்பத்தியை தடுத்துவிடும்.
க்ரீன் டீ
சாப்பிடவும், க்ரீன் டீயில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே அவை உடலின் மூட்டுகளில் ஏற்படும் வலியின் அளவை குறைத்துவிடும்.
சர்க்கரை
தவிர்க்கவும், மூட்டு வலிகளுக்கு சர்க்கரை மிகவும் கேடு விளைவிக்கும் ஒரு உணவுப் பொருள். ஏனெனில் சர்க்கரை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை அதிகமாவதால், மூட்டுகளில் அழுத்தம் அதிகரித்து, வலியும் அதிகமாகும்.