உங்கள் செல்போன் வெடிப்பதை தடுக்கணுமா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க
தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் தற்போதைய காலக்கட்டத்திலும் செல்போன்கள் வெடித்து சிதறும் சம்பவங்களும் ஓயாமல் அரங்கேறுகின்றன.
செல்போன் வெடிப்பதை தடுக்கவும், அது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும்?
பேட்டரி
செல்போன்களில் வெடிக்கக்கூடிய ஒரே சாதனம் பேட்டரி தான். அது வெடிக்கும் போது தான் செல்போன் மொத்தமாக வெடித்து சிதறுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? உங்கள் போனின் சார்ஜரைக் கொண்டு ஜார்ச் போடாமல், பிறரின் செல்போன் சார்ஜர்களை பயன்படுத்துவதாகும். அது எப்படி எல்லாமே ஒரே பின் கொண்ட சார்ஜர் தானே என நினைக்கலாம். ஆனால் பேட்டரியின் திறன் அனைத்து போன்களிலும் ஒன்று இல்லையே. ஒவ்வொரு போனிலும் பேட்டரி திறன் மாறுபடுகின்றன.
சரியான சார்ஜர்
அந்தத் திறனுக்கு ஏற்றவாறு வோல்ட் மதிப்பு கொண்ட சார்ஜ்களே, போனுடன் வழங்கப்படுகின்றன. அந்த ஒரிஜினல் சார்ஜர்களை பயன்படுத்தும் போது, பேட்டரின் வெப்பநிலையில் தாக்கம் ஏற்படுவதில்லை. ஆனால் குறைந்த திறன் கொண்ட பேட்டரிக்கு, அதிக வோல்ட் கொண்ட சார்ஜரை பயன்படுத்து போது அந்த பேட்டரி பருமன் அடைகிறது. அதன் திறனில் நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. இதனால் உங்கள் போனில் நீண்ட நேரம் சார்ஜ் நிக்காத நிலை உண்டாகலாம். இதனால் நீங்கள் நீண்ட நேரம் சார்ஜ் போட்டு வைத்திருப்பீர்கள். பின்னர் இந்த நிலையற்ற தன்மையால் ஒரு நாள் உங்கள் போன் எந்நேரத்திலும் வெடித்து சிதறும். அதனால் இனிமேல் உங்கள் போனுக்கு சரியான சார்ஜரை பயன்படுத்துங்கள்.
சார்ஜ் போட்டு பேசுவது
செல்போன்கள் வெடிக்கும் சம்பவம் என்றாலே, பெரும்பாலானோர் அறிந்தது சார்ஜ் போட்டு பேசினால் வெடிக்கும் என்பது தான். அது ஏன்? சார்ஜ் போட்டு அழைப்புகளை பேசுவதால், உங்கள் செல்போனிற்கு அதிகமான சிக்னல் தேவைப்படுகிறது. அதனால் சார்ஜர் மூலம் பாயும் வோல்ட் அளவிலும் நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. இதன்மூலம் பேட்டரியின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே சென்று, திடீரென்று வெடித்து சிதறும். இதனால் சார்ஜ் போட்டு செல்போனை உபயோகப்படுத்தும் தவறை மட்டும் செய்யாதீர்கள்