2வது ஒருநாள் போட்டியில் நீக்கப்பட்ட பொல்லார்டு - கடைசி நேரத்தில் நடந்தது என்ன?
இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு நீக்கப்பட்டது தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு விளையாடாதது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. முக்கியமான போட்டியில் அவர் இடம் பெறாதது குறித்து பல கேள்விகள் எழுந்த நிலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடருக்கு முன்பாக தங்களது சொந்த மைதானத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது. அந்த தொடரில் மூன்று போட்டிகளில் பேட்டிங் செய்த பொல்லார்டு 4 ரன்கள் மட்டுமே அடித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால் இளம் வீரர்களின் மோசமான ஆட்டத்தால் தான் தோல்வி அடைந்தோம் என்று அவர் சொல்லியிருந்ததால் அணிக்குள் பிரச்சனை வெடித்தது. அதேசமயம் முதல் ஒருநாள் போட்டியில் பொல்லார்டு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.இதனால் தான் அவர் 2வது ஒருநாள் போட்டியில் நீக்கப்பட்டார் என கூறப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியமோ பொல்லார்டுக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டதாலும், இன்றைய போட்டியில் விளையாடும் அளவிற்கு அவர் உடற்தகுதியுடன் இல்லை என்பதனாலும் விளையாடவில்லை என்று தெரிவித்ததால் நிக்கோலஸ் பூரன் இந்த ஆட்டத்தில் கேப்டனாக செயல்பட்டார்.