செம்பருத்தி சீரியல் நடிகை பார்வதியின் அவசர திருமணத்திற்கு இது தான் காரணமா? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
செம்பருத்தி சீரியல் நடிகர் ஷபானாவின் அவசர கல்யாணத்திற்கான காரணம் குறித்து இணையத்தில் பல தகவல்கள் உலா வருகின்றன.
தனியார் தொலைக்காட்சியில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கிய சீரியல் இன்று வரை சூப்பர் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் நடிகை ஷபானா, பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு என்று சோசியல் மீடியாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் ஷபானாவும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆரியனும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் பரவியது.
சமீபத்தில் இருவரும் கையில் மோதிரம் அணிந்திருந்த புகைப்படத்தை ஆர்யன் அவரது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர் திருமண கோலத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு தனக்கு கல்யாணம் நடக்க போவதாக கண்ணீர் மல்க அறிவித்தார்.
இதையடுத்து அவரது ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இருப்பினும் அவர்களின் இந்த அவசர திருமணம் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷபானா முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்.
ஆனால் ஆர்யன் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் தான் இவர் இந்த மாதிரி அவசர அவசரமாக திருமணத்தை முடித்து விட்டார் என்று கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இவர்களது திருமணத்தில் ஷபானாவின் பெற்றோர்கள் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.