சூரிச் விமான நிலையத்தில் திடீரென்று குவிந்த மக்கள் கூட்டம்: வெளியான காரணம்
கொரோனா பரவல் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், சூரிச் விமான நிலையத்தில் பயணிகளின் நீண்ட வரிசை காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனையடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் சூரிச் விமான நிலையத்தில் குவிந்ததாக கூறப்படுகிறது.
பயணிகளால் நீண்ட வரிசை காணப்பட்டாலும் சில கவுண்டர்கள் மட்டுமே திறந்திருந்தன என நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி சனிக்கிழமையும், கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் நீண்ட வரிசை காணப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
பொதுவாக அரை மணி நேரத்தில் மொத்த நடவடிக்கைகளையும் முடித்து, பயணிகளை உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால் கடந்த சில வாரங்களாக, பயணிகளின் ஆவணங்கள் மொத்தம் விரிவாக சரிபார்க்க வேண்டும் என்பதால் தாமதமாவதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, குறிப்பிட்ட நாடுகளில் பயணிகள் வருகை தடை செய்யப்பட்டுள்ளதால், அதற்கான கலந்தாலோசித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் மேலும் காலதாமதமாவதாக கூறப்படுகிறது.
இருப்பினும், பகல் 9 மணி முதல் 10 மணிக்குள் 14 விமானங்கள் புறப்பட்டு சென்றதாக சூரிச் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலும், ஐரோப்பிய நாடுகளான போர்டோ, லாஸ் பால்மாஸ் மற்றும் ஏதென்ஸுக்கு பயணிகள் புறப்பட்டு சென்றுள்ளனர்.