அதிர்ஷ்டத்தின் கருவி! கணுக்காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன் தெரியுமா?
இந்தியாவின் பல பகுதிகளில் கணுக்காலில் கருப்பு கயிறு கட்டுவது நீண்ட காலமாக கடைபிடிக்கப்படும் பழக்கமாக உள்ளது.
இது வெறும் நூல் துண்டு அணிவது போல் தோன்றினாலும், இதன் பின்னே ஆழமான அர்த்தங்கள் உள்ளன. இந்த கட்டுரை, கணுக்காலில் கருப்பு கயிறு கட்டும் பழக்கத்தின் பின்னணி அர்த்தங்களை ஆராய்கிறது.
பாதுகாப்பின் கவசம்
கணுக்காலில் கருப்பு கயிறு கட்டும் முக்கிய காரணங்களில் ஒன்று, தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு பெறுவது. இந்து மதத்தில், "திருஷ்டி" (Drishti) எனப்படும் துரதிருஷ்டி பார்வை, பிறர் பொறாமை அல்லது பாராட்டுவதால் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது.
பாரம்பரிய நம்பிக்கையின்படி, கருப்பு நிறம் தீய சக்திகளை உறிஞ்சுவதாகவும், அவை நம்மை பாதிப்பதை தடுப்பதாகவும் கருதப்படுகிறது. இதன் மூலம், கெடுதல்கள் மற்றும் துர்திஷ்டம் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதாக நம்பப்படுகிறது.
கருப்பு கயிறு கிரகங்களின் அமைப்புடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது, அதிலும் குறிப்பாக சனி கிரகத்துடன் கருப்பு கயிறு தொடர்புடையதாக நம்பப்படுகிறது.
நல்ல அதிர்ஷ்டத்திற்கான கயிறு
பாதுகாப்பு தருவது மட்டுமல்லாமல், நல்ல அதிர்ஷ்டத்திற்கான விருப்பங்களையும் கருப்பு கயிறு குறிக்கிறது. புதிய வேலை, புதிய வீடு என புதிய தொடக்கங்களின் போது இதை அணிவதுண்டு.
இது நேர்மறையான ஆற்றல்களையும் வெற்றியையும் ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், நல்ல ஆரோக்கியத்திற்கான பிரார்த்தனையாகவும், நம்பிக்கையுடன் இருப்பதற்கான நினைவூட்டலாகவும் இது செயல்படுகிறது.
ஆசீர்வதிக்கப்பட்ட கயிறு
கருப்பு கயிறு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட. சில சமயங்களில் இது சாமியார் அல்லது பூசாரி போன்ற மத குருவால் ஆசிர்வதிக்கப்படுகிறது இதன் மூலம், கயிற்றில் ஆன்மீக சக்தி குடி கொள்கிறது என்று நம்பப்படுகிறது.
பல்வேறு கலாச்சாரங்களில் கருப்பு கயிறு
கருப்பு கயிறு பெரும்பாலும் கணுவில் அணியப்பட்டாலும், பிற கலாச்சாரங்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
சில பழக்க வழக்கங்களில், கை மணிக்கட்டில் அல்லது இடுப்பில் கயிறு அணியப்படுகிறது.
மேலும், குறிப்பிட்ட நம்பிக்கை அல்லது நோக்கத்தைப் பொறுத்து கயிற்றின் நிறம் கூட மாறுபடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Black Thread Ankle Meaning Hindu,
Black Thread Protection Evil Eye,
Black Ankle Bracelet Meaning India,
Lucky Thread Around Ankle Tamil Culture,
Spiritual Meaning of Black Thread on Ankle,