குஷ்புவிற்கு அன்று நடந்த அந்த மோசமான நிகழ்வு தான்... நான் இன்று பிரச்சாரத்திற்கு வர காரணம்: சுந்தர்.சி உருக்கம்
பிரபல திரைப்பட இயக்குனரான சுந்தர் சி, என் மனைவி தாக்கப்பட்டது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என்று உருக்கமாக பேசியுள்ளார்.
நடிகையான குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகாவில் சில மாதங்களுக்கு முன் இணைந்தார்.
இதையடுத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், குஷ்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் அவர் அப்பகுதியில் வீடு வீடாக சென்று, வாக்குகளை சேகரித்து வருகிறார்.
குஷ்புவிற்காக அவருடைய கணவருடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்த வகையில், குஷ்புவை ஆதரித்து சுந்தர் சி கோடம்பாக்கம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, ஊடகம் ஒன்றிற்கு சில உருக்கமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், கடந்த 2010-ஆம் ஆண்டு என் மனைவி குஷ்பு தாக்கப்பட்டது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.
அந்தக் கட்சியின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்று விட்டு வந்தபோது என் வீட்டில் என் அம்மா மற்றும் குஷ்புவின் அம்மா ஆகிய இருவரும் இருந்தார்கள்.
என் பெண் குழந்தைகள் இருவரும் இருந்தார்கள். அப்போது நான் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தேன்.
அப்பொழுது குஷ்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. செருப்பை தூக்கி அடித்து முந்தானையை பிடித்து எடுத்து தாக்குதல் நடந்ததைக் கேள்விப்பட்டு பதறிவிட்டேன்.
அது என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது. நான் இப்போது பிரச்சாரத்திற்கு வருவதற்கு அது தான் விதை, திரைப்படத்தில் காட்டப்படும் அரசியலும், உண்மை அரசியலுக்கும் நிறைய வேறுபாடு என்று கூறினார்.