மன்னருடைய நாடாளுமன்ற உரையின்போது பக்கிங்காம் அரண்மனையில் பிணைக்கைதியாக வைக்கப்படும் அரசியல்வாதி
பிரித்தானியாவில் தேர்தல் நடைபெற்று புதிய அரசு பதவியேற்றபின், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பக்கிங்காம் அரண்மனையில் பிணைக்கைதியாக வைக்கப்படுவதைக் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
யார் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்?
Vice-Chamberlain of the Household என்னும் பொறுப்பிலிருக்கும் லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Samantha Dixon என்பவர்தான் பக்கிங்காம் அரண்மனையில் பிணைக்கைதியாக வைக்கப்படுபவர் ஆவார்.
கடந்த ஆண்டு, Jo Churchill என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் பிணைக்கைதியாக வைக்கப்படிருந்தார்.
Just getting ready to be taken hostage before my duties in today's #KingsSpeech! pic.twitter.com/lkbEiaOtJN
— Jo Churchill (@Jochurchill_MP) November 7, 2023
எதனால் அவர் பிணைக்கைதியாக வைக்கப்படுகிறார்?
முதலாம் சார்லஸ் என்பவர் பிரித்தானியாவின் மன்னராக இருந்தபோது, அவருக்கும் நாடாளுமன்றத்துக்கும் தொடர்ந்து மோதல் இருந்துள்ளது. 1649ஆம் ஆண்டு அவர் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டார்.
அந்த விடயத்தை நினைவுகூரும் வகையில், நாடாளுமன்றம் துவங்கும் முன், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பக்கிங்காம் அரண்மனையில் பிணைக்கைதியாக வைக்கப்படுவது மரபாகிவிட்டது.
அதாவது, பக்கிங்காம் அரண்மனையிலிருந்து நாடாளுமன்றம் சென்ற மன்னர் பத்திரமாக மீண்டும் அரணம்னைக்குத் திரும்பும்வரை அந்த நாடாளுமன்ற உறுப்பினர் அரண்மனையில் பிணைக்கைதியாக வைக்கப்படுவார்.
மன்னருடைய நாடாளுமன்ற உரையை அவர் தொலைக்காட்சியில்தான் பார்க்கமுடியும்.
வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் குண்டு உள்ளதா என தேடல்
அதேபோல, மன்னர் நாடாளுமன்றத்துக்கு வரும் முன், மன்னருடைய பாதுகாவலர்கள், வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் குண்டுகள் ஏதேனும் வைக்கப்பட்டுள்ளனவா என சோதனையிடுவார்கள்.
இதுவும் ஒரு மரபுதான். அதாவது, 1605ஆம் ஆண்டு, மன்னர் ஜேம்ஸுடன் நாடாளுமன்றத்தையும் வெடிவைத்து தகர்க்க செய்த சதிவேலை கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது. அதிலிருந்து, மன்னருடைய பாதுகாவலர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் குண்டுகள் ஏதேனும் வைக்கப்பட்டுள்ளனவா என சோதனையிடுவதும் மரபாகிவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |