பிரித்தானியாவில் அதிக நேரம் செலவிட ஹரி திட்டம்: பின்னணியில் ட்ரம்ப்?
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விடயம், பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் தம்பதியருக்கு பதற்றத்தை உருவாக்கியுள்ளது போல் உள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவில் அதிக நேரம் செலவிட ஹரி திட்டம் வைத்துள்ளதற்கும், ட்ரம்ப் குடும்பத்துக்கும் தொடர்புள்ளது என ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் அதிக நேரம் செலவிட ஹரி திட்டம்
Image: Getty Images
ராஜ குடும்பத்தைப் பிரிந்து, பிரித்தானியாவிலிருந்து வெளியேறி, அமெரிக்காவில் குடியமர்ந்தார்கள் ஹரி, மேகன் தம்பதியர்.
ஆனால், கடந்த அமெரிக்க தேர்தலின்போது அவர்கள் தெரிவித்த சில கருத்துக்கள், ட்ரம்புக்கு எதிரானவையாக கருதப்பட்டன. அப்போது, ட்ரம்பும் ஹரி, மேகன் தம்பதியரை விமர்சித்திருந்தார்.
அத்துடன், அமெரிக்க விசா பெறும் விடயத்தில், போதைப்பொருட்கள் பயன்படுத்திய பிரச்சினை ஒன்றில் ஹரி பொய் சொன்னதாக எழுந்த விவகாரம் குறித்து விமர்சித்திருந்த ட்ரம்ப், ஹரி நாடுகடத்தப்படலாம் என்று கூறியிருக்கிறார்.
மேலும், ட்ரம்பின் மகனான எரிக் ட்ரம்ப், ஒவ்வொரு தோட்டத்திலும் சில அழுகிய ஆப்பிள்கள் இருக்கக்கூடும். அமெரிக்கர்களால் மதிக்கப்படும் ராஜ குடும்பம் என்னும் அழகான அமைப்பு பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறியிருந்தார்.
Image: Getty Images for W+P
அதாவது, ராஜ குடும்பம் என்னும் தோட்டத்தில், ஹரியும் மேகனும் அழுகிய ஆப்பிள்கள் என்னும் ரீதியில் விமர்சித்திருந்தார் எரிக் ட்ரம்ப்.
ஆக, இப்போது ட்ரம்ப் ஜனாதிபதியாகிவிட்ட நிலையில் ஹரி, மேகன் தம்பதியருக்கு ட்ரம்ப் தரப்பிலிருந்து தொல்லை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே, ஹரி இனி பிரித்தானியாவில் கூடுதல் நேரம் செலவிடக்கூடும் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |