டயானாவை பிரிந்து மறுமணம் செய்த சார்லஸ்! திருமணத்தில் பங்கேற்காத மகாராணி... காரணம் என்ன?
சார்லஸின் இரண்டாவது திருமணத்தில் கலந்து கொள்ளாத அவர் தாயார் எலிசபெத் மகாராணி.
அதற்கான காரணத்தை தெரிவித்துள்ள பிரபலம்.
இளவரசி டயனாவுடனான விவாகரத்துக்கு பின்னர் சார்லஸ் மறுமணம் செய்த நிலையில் அதில் பிரித்தானிய மகாராணி கலந்து கொள்ளாததன் காரணம் தெரியவந்துள்ளது.
பிரித்தானிய மன்னராக தற்போது ஆகியுள்ள சார்லஸுக்கும், டயானாவுக்கும் 1981ல் திருமணம் நடந்த நிலையில் 1996ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதன்பின்னர் சார்லஸ் கமீலா என்ற பெண்ணை கடந்த 2005ஆம் ஆண்டு மணந்தார்.
இந்த திருமணத்தில் சார்லஸின் தாயாரான மகாராணி எலிசபெத்தும் அவர் கணவருமான பிலிப்பும் கலந்து கொள்ளவில்லை. இதற்கான காரணத்தை டெலிகிராப் பத்திரிக்கையின் தலைமை நிருபர் ஆண்ட்ரூ ஆல்டர்சன் வெளியிட்டுள்ளார்.
tyla
அதன்படி அந்த திருமணத்தில் கலந்து கொள்வது பொருத்தமாக இருக்காது என மகாராணி எண்ணியுள்ளார். அதாவது, ராணியார், தான் Church of Englandன் தலைவர் என்ற முறையில் சார்லஸ் - கமீலா திருமணத்தில் கலந்து கொண்டால் விவாகரத்தை ஊக்குவிப்பது போல ஆகிவிடும் என நினைத்துள்ளார். ஏனெனில் சார்லஸ் மட்டும் டயனாவை விவாகரத்து செய்யவில்லை, கமீலாவும் தனது முதல் கணவர் ஆண்ட்ரூ பார்கரை விவாகரத்து செய்த பின்னரே சார்லஸை மணந்தார்.
குடும்ப உணர்வுகளை விட பிரித்தானிய தேவாலயத்தின் தலைவராக தனது கடமைகளை முன்வைக்க விரும்பியே ராணி தனது மகனின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.
சர்ச் ஆஃப் இங்கிலாந்துக்கு சேதம் விளைவிக்கும் ஒரு முன்னுதாரணத்தை அமைக்க ராணி விரும்பவில்லை என ஆல்டர்சன் கூறினார்.