கனடா இந்தியா உறவுகள் பாதிக்கப்பட இதுதான் காரணம்: இந்திய வெளியுறவு அமைச்சரின் கருத்து
கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகள் பாதிக்கப்படுவதற்கு என்ன காரணம் என்பதைக் குறித்து இந்திய தரப்பின் கருத்தை முன்வைத்துள்ளார் இந்திய வெளியுறவு அமைச்சர்.
இவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது தான் காரணம்
கனடா அரசியல், காலிஸ்தான் அமைப்பினருக்கு இடமளித்துள்ளது என்றும், கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சரான S.ஜெய்ஷங்கர் கூறியுள்ளார்.
இப்படி அரசியலில் காலிஸ்தான் அமைப்பினருக்கு இடமளிக்கப்பட்டுள்ளதுதான் இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட காரணம் என தான் கருதுவதாக தெரிவித்த அமைச்சர், அதனால் இந்தியாவுக்கும் பயனில்லை, கனடாவுக்கும் பயனில்லை, துரதிர்ஷ்டவசமாக, அதுதான் கனடா அரசின் நிலைப்பாடாக உள்ளது என்றார்.
#WATCH | On India-Canada ties & Khalistani issue, EAM Jaishankar in an interview to ANI says, "...The issue at heart is the fact that in Canadian politics the Khalistani forces have been given a lot of space. And allowed to indulge in activities, which I think are damaging to the… pic.twitter.com/zzcWABgO34
— ANI (@ANI) January 2, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |