Keyboard-களில் ஆங்கில எழுத்துக்கள் இடம்மாறி இருப்பதற்கான காரணம் தெரியுமா?
பலரும் Keyboard-களில் ABCD எழுத்துக்கள் ஏன் வரிசையாக இடம்பெறவில்லை என்று சிந்தித்து இருப்போம்.
Keyboard-களில் தற்போது பயன்படுத்தப்படும் வடிவம் QWERTY வடிவம் என்று அழைக்கப்படுகிறது.
அந்தவகையில், Keyboard-களில் ஆங்கில எழுத்துக்கள் இடம்மாறி இருப்பதற்கான காரணம் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்த கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ், ஏபிசிடி வரிசையிலேயே முதல் விசைப்பலகையைத் தயாரித்தார்.
ஆனால் அவ்வாறு வரிசையாக அமைக்கப்பட்ட போது தட்டச்சு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
அருகருகே இருக்கும் எழுத்துக்களை தட்டச்சு செய்வது சிரமமாக இருந்தது. எழுத்துக்களை பொருத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகளால் சிக்கல்கள் ஏற்பட்டன.
தட்டச்சு செய்வதை வசதியாகவும் எளிமையாகவும் மாற்ற எழுத்துக்கள் வார்த்தைகளில் பயன்படுத்தும் விதங்களை அடிப்படையாக கொண்டு இடம்மாறி வைக்கப்பட்டு தட்டச்சு இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டன.
பிறகு, 1870 களில் QWERTY வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் தட்டச்சு இயந்திரங்களில் ஊசிகள் ஒன்றை ஒன்று ஒட்டும் அபாயம் குறைக்கப்பட்டது.
இதுபோன்ற பல அபாய காரணங்களால் எழுத்துக்களை தட்டச்சு செய்வதற்கு QWERTY வடிவம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |