வேக வைத்த முட்டையை எவ்வளவு மணி நேரத்திற்குள் சாப்பிட்ட வேண்டும்?

Egg
By Sakthi Raj Sep 05, 2026 06:32 AM GMT
Report

பொதுவாக, ஒவ்வொரு உணவையும் சாப்பிடுவதற்கு என்று உரிய கால நேரம் இருக்கிறது. அந்த நேரத்திற்கு நாம் சாப்பிட்டு முடிக்க வேண்டும். அப்படியாக, வேக வைத்த முட்டையை நாம் எவ்வளவு நேரத்திற்குள் சாப்பிட வேண்டும்? என்பதை பார்ப்போம்.

சமீப காலமாக மக்களிடையே ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இது ஒரு நல்ல ஆரோக்கியமான அணுகுமுறை. அதிலும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை தேர்வு செய்கின்ற பொழுது பலருக்கும் எளிதான மற்றும் குறைந்த செலவிலான தீர்வாக இருப்பது முட்டைதான்.

இவை குறைந்த விலையில் கிடைப்பதோடு சமைப்பதும் மிக மிக எளிது. முட்டையை வேக வைப்பதற்கு அதிக நேரமும் எடுப்பது இல்லை.

வேக வைத்த முட்டையை எவ்வளவு மணி நேரத்திற்குள் சாப்பிட்ட வேண்டும்? | Reason Why Should Eat Boiled Egg Before This Time

சில நிமிடங்களில் நாம் வேகவைத்து சத்தான மூட்டையை சாப்பிட்டு விடலாம். முட்டையை அவரவர் வசதிக்கேற்ப சமைத்துக் கொள்வது உண்டு. இருப்பினும் வேகவைத்த முட்டையை சாப்பிடுவதின் வழியாக நம்முடைய உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நன்மைகளும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால், வேகவைத்த முட்டையை குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

பொதுவாக, வேக வைத்த முட்டை அரை வெப்ப நிலையில் வைத்திருந்தால் இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே நாம் சாப்பிட்டு முடித்தாக வேண்டும். ஒரு வேலை வெயில் காலத்தில் சுற்றி உள்ள வெப்பநிலை 32°C (90°F)மிக அதிகமாக இருந்தால் ஒரு மணி நேரத்திற்குள் நாம் சாப்பிடுவது அவசியம் ஆகும்.

இதற்கு பின்னால் சில காரணங்கள் சொல்லப்படுகிறது. அதையும் தெரிந்து கொள்வோம். முட்டையின் ஓட்டின் மீது இயற்கையாகவே 'கியூட்டிக்கிள்' என்ற என்ற மெல்லிய பாதுகாப்பு படலம் உண்டு. இது பாக்டீரியாக்கள் முட்டைகுள் செல்வதை தடுக்கிறது. ஆனால், முட்டையை நீரில் போட்டு வேக வைக்கின்ற பொழுது இந்த அடுக்கு முற்றிலும் அழிந்து விடுகிறது.

வேக வைத்த முட்டையை எவ்வளவு மணி நேரத்திற்குள் சாப்பிட்ட வேண்டும்? | Reason Why Should Eat Boiled Egg Before This Time

இதனால் காற்றில் இருக்கக்கூடிய கிருமிகள் மிக எளிதாக ஓட்டில் உள்ள நுண் துளைகள் வழியாக நுழைய கூடும். மேலும், சமைத்த உணவுகளை 4°C முதல் 60°C வரையிலான வெப்பநிலையில் நீண்ட நேரமாக வைக்கின்ற பொழுது அவை பாக்டீரியாக்கள் வேகமாக வருவதற்கான அபாயம் உள்ளது.

குறிப்பாக, சால்மோனெல்லா ஆபத்தான பாக்டீரியாக்கள் வேகவைத்த முட்டைகள் மிக வேகமாக பரவிகிறது. வெப்ப நிலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வைக்கப்பட்ட முட்டையை நாம் சாப்பிடுகின்ற பொழுது வாந்தி வயிற்றுப்போக்கு காய்ச்சல் போன்ற உணவு நச்சுத்தன்மை பாதிப்புகள் வரலாம்.

ஒருவேளை இரண்டு மணி நேரத்திற்குள் சாப்பிட முடியவில்லை என்றால் அந்த முட்டையை பாதுகாப்பாக பயன்படுத்தக்கூடிய சில குறிப்புகளையும் தெரிந்து கொள்வோம். வேகவைத்த முட்டையை ஓடு உரிக்காமல் அவ்வாறே குளிர்சாதன பெட்டியில் வைத்தால் ஏழு நாட்கள் வரை பாதுகாப்பாக வைத்து சாப்பிடலாம் என்று சொல்கிறார்கள்.

வேக வைத்த முட்டையை எவ்வளவு மணி நேரத்திற்குள் சாப்பிட்ட வேண்டும்? | Reason Why Should Eat Boiled Egg Before This Time

நாம் ஓட்டை உரிக்காமல் அப்படியே பிரிட்ஜில் வைப்பது நல்லது. அதை போல், முட்டையை குளிர்சாதனர்பட்டியின் கதவு பகுதிகளில் வைக்க கூடாது. காரணம் அடிக்கடி பிரிட்ஜ் கதவுகளை திறந்து மூடுவதால் அங்கு வெப்பநிலை மாறிக்கொண்டே இருக்கும். உள் பகுதியில் உள்ள அடுக்கு பகுதிகளில் வைப்பது பாதுகாப்பு என்று சொல்கிறார்கள்.

இது மட்டும் இல்லாமல் வேகவைத்த முட்டையை உடைக்கும் போது கசப்பு அல்லது அழுகிய வாசனை வந்தால் அல்லது வழுவழுப்பு தன்மை இருந்தாலும் எந்த காரணத்தை கொண்டும் சாப்பிடாதீர்கள். 

6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US