மெஸ்ஸி PSG கிளப்பை விட்டு விலக மாட்டார்; காரணங்களை கூறிய ஸ்பெயின் பத்திரிகையாளர்
லியோனல் மெஸ்ஸி இந்த கோடையில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) கிளப்பை விட்டு வெளியேற வாய்ப்பில்லை என்பதற்கான முக்கிய காரணத்தை ஸ்பானிஷ் பத்திரிகையாளர் Guillem Balague கூறியுள்ளார்.
வதந்திகள்
FIFA உலகக் கோப்பை வெற்றியாளராக தனது வாழைநாள் கனவை நிறைவேற்றிய பிறகும், மெஸ்ஸி தொடர்ந்து கால்பந்து விளையாடுகிறார். உலகக் கோப்பையை வென்ற பிறகு மெஸ்ஸி ஓய்வு பெறுவார் என்ற வதந்திகள் வலுவாக இருந்தன, ஆனால் அது குறித்து மெஸ்ஸி இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஆனால், மெஸ்ஸி தற்போது பிரான்ஸ் கிளப் பாரிஸ் செயின்ட் ஜெர்மைனை விட்டு வெளியேறுவதாக பல்வேறு வதந்திகள் வந்தன.
Sky sports
அல் ஹிலால், இன்டர் மியாமி, மேன்செஸ்டர் சிட்டி மற்றும் பிற கிளப்புகளுக்கு மெஸ்ஸி ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பல செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் தற்போது, மெஸ்ஸி PSGயை விட்டு வெளியேற மாட்டார் என்றும், பிரெஞ்சு கிளப்பில் நீடிப்பார் என்றும் ஸ்பெயின் பத்திரிகையாளர் Guillem Balague முன்வந்து கூறியுள்ளார்.
காரணங்கள்
El Futbalero-க்கு Balague அளித்த பேட்டியில், மெஸ்ஸி PSG-ல் தொடர்ந்து இருப்பார் என்றும் அதற்கு தெளிவான காரணங்கள் இருப்பதாகவும் கூறினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மெஸ்ஸியும் அவரது குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக பாலேக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மற்றும் மெஸ்ஸி பிஎஸ்.ஜி நிர்வாகத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதாகவும், பார்காவில் இருந்ததை விட மெஸ்ஸி PSG-ன் உயரடுக்கினருடன் மிகவும் சுதந்திரமாக தொடர்பு கொள்ள முடியும் என்றும் பாலேக் கூறுகிறார்.
Getty images
இதுவரை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வெல்ல முடியாத PSG-க்காக முதல் சாம்பியன்ஸ் லீக்கை வெல்ல மெஸ்ஸி கடுமையாக முயற்சிப்பதாகவும் பாலேக் கருத்து தெரிவித்தார்.
இதனுடன், PSG உடனான தனது ஒப்பந்தத்தை மெஸ்சி ஏற்கனவே நீட்டித்து விட்டார் என்ற செய்தியும் முன்னதாகவே வெளிவந்தது. ஆனால், இந்தச் செய்திகள் இதுவரை உறுதி செய்யப்படாததால், இது பொய்யான செய்தியாக இருக்கலாம் என கால்பந்து நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், PSG-ன் அடுத்த போட்டி ஜனவரி 30-ஆம் திகதி Reims-க்கு எதிராக விளையாடவுள்ளது. தற்போது லீக் 1 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பிஎஸ்ஜி லீக்கில் தனது ஆதிக்கத்தை தக்கவைக்க இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும்.