பாராசிட்டமால் மாத்திரை பெட்டிகளில் கொடுக்கப்பட்டுள்ள தவறான தகவல்: கனேடிய நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கை
பாராசிட்டமால் மாத்திரைகள் தயாரிக்கும் கனேடிய நிறுவனம் ஒன்று, தனது தயாரிப்பில் குறிப்பிட்ட சில பாக்கெட் மாத்திரைகளை மட்டும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
தலைவலி, ஜூரத்துக்காக உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் பயன்படுத்தும் பாராசிட்டமால் மாத்திரைகளே, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
மாதவிடாய் காலங்களில் வயிற்றுவலி வந்தால், அதற்காக வலி நிவாரணி எடுத்துக்கொள்ளும் பெண்களும் உண்டு. ஆனால், வலி நிவாரணிகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது அவை கல்லீரலை சேதப்படுத்தக்கூடும்.
உதாரணமாக, பாராசிட்டமால் மாத்திரைகளை அளவுக்கதிகமாக எடுத்துக்கொண்டால், தலைசுற்றல், வாந்தி, அசதி, அதீத வியர்வை வெளியாதல், பசியின்மை மற்றும் வயிற்று வலி ஏற்படலாம். அடிவயிற்று வலி கல்லீரல் பாதிப்பின் முதல் அறிகுறியாக இருக்கக்கூடும். கல்லீரல் பாதிப்பு கல்லீரல் செயலிழப்பையும், மிக மோசமான பாதிப்பு மரணத்தையும் கூட ஏற்படுத்தலாம்.
சரி, விடயத்துக்கு வருவோம்...
கனேடிய மருந்து தயாரிப்பு நிறுவனமான Teva Canada, Novo-Gesic Forte acetaminophen என்ற பெயரில் தயாரிக்கும் 500 மில்லிகிராம் மாத்திரை பாக்கெட்கள் சிலவற்றை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
DIN 00482323 மற்றும் lot number 35364729A மற்றும் 35217483A, காலாவதி திகதி ஜூன் 2023 கொண்ட மாத்திரை பாக்கெட்களை பயன்படுத்தவேண்டம் என்றும், அவற்றைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறும் அந்நிறுவனம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
பிரச்சினை என்னவென்றால், அந்த மாத்திரை பாக்கெட்களின் லேபிலில் ’do not take more than 4,000 mg (12 tablets) in 24 hours.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 24 மணி நேரத்தில் 12 மாத்திரைகளுக்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது, 24 மணி நேரத்தில் 8 மாத்திரைகளுக்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது என்று இருக்கவேண்டும்.
மக்கள் யாரும் மாத்திரை பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதை நம்பி 12 மாத்திரைகள் வரி எடுத்துவிடக்கூடாது என்பதற்காக, அந்த குறிப்பிட்ட பாக்கெட்களை திரும்பப் பெறுகிறது Teva Canada நிறுவனம்.