கொரோனா சோதனைக்கான கட்டண ரசீது: குழப்பத்தில் சுவிஸ் மக்கள் 800 பேர்
சுவிட்சர்லாந்தின் St. Gallen மாநிலத்தில் 800 பேர்களுக்கு கொரோனா சோதனைக்கான கட்டண ரசீது அனுப்பப்பட்ட சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
St. Gallen மாநிலத்தில் மருத்துவ ஆய்வகம் ஒன்று கொரோனா பரவல் துவங்கிய கட்டம் முதல் சுமார் 100,000 மக்களுக்கு பரிசோதனை முன்னெடுத்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்கள் மற்றும் வாரங்களில் 800 பேர்களுக்கு கொரோனா பரிசோதனைக்கான கட்டண ரசீது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் குழம்பிப்போன மக்கள் முன்னெடுத்த விசாரணையில், குறித்த கட்டண ரசீதானது தவறாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
See-Gaster பகுதியில் உள்ள 800 பேர்களுக்கு மட்டுமே இந்த ரசீது அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 60 பேர்களுக்கு இரண்டு முறையும் ரசீது கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த மக்களிடம் விளக்கமளித்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.