வீட்டிலேயே காஷ்மீரி மிளகாய் தூள்! எப்படி செய்யலாம்?
காஷ்மீர் சிவப்பு மிளகாய் (Kashmiri red chilli) அல்லது காஷ்மீரி லால் மிர்ச் என்பது உணவுக்கு அடர் சிவப்பு நிறத்தைக் கொடுக்கும், வண்ணம் மற்றும் சுவை சேர்க்கும் திறன் கொண்ட மிளகாய் வகையாகும். மேலும் உணவை மிகவும் காரமானதாக மாற்றாது.
காஷ்மீர் மிளகாய் செய்ய தேவையான பொருட்கள்!
100 g காய்ந்த சிவப்பு மிளகாய்
150 g காஷ்மீரி மிளகாய் அல்லது பீடகி மிளகாய்
1 மே.க நிலக்கடலை
சுத்தமான வெள்ளை துணி
2 சிட்டிகை-உப்பு
image credit:depositphotos
செய்முறை
100 g காய்ந்த சிவப்பு மிளகாய்,150 g காஷ்மீரி மிளகாய் அல்லது பீடகி மிளகாயை நன்றாக வெயிலில் காயவைத்து எடுத்து ஒரு வெள்ளை துணியில் சிறிது எண்ணெய் தடவி காய வைத்த மிளகாயில் தேய்த்து எடுத்துக்கொள்ளுங்கள்.
2 சிட்டிகை அளவு உப்பு சேர்த்து 1 மே.க நிலக்கடலையையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
சூப்பரான காஷ்மீரி மிளகாய் ரெடி!
இதனை ஒரு கொள்கலனில் போட்டு வெகுநாட்கள் பயன்படுத்தலாம் மேலும் உப்பு சேர்ப்பதால் விரைவில் கெடாது.
தேவையற்ற கலரிங் சேர்த்து கடைகளில் விற்கப்படும் மிளகாய் தூள்களை விட இது ஆரோக்கியமானது.
ஆகவே இந்த முறையில் செய்து பாருங்கள்.