Shamar Joseph திறமைக்கு அங்கீகாரம்.., இனி இவர்களை போல அதிகபட்ச சம்பளம் கிடைக்கும்
Shamar Joseph -ன் உரிமை ஒப்பந்தத்தை தற்போது வெஸ்ட் இண்டீஸ் வாரியம் சர்வதேச ரிட்டைனர் ஒப்பந்தமாக மேம்படுத்தி அறிவித்துள்ளது.
Shamar Joseph -ன் கடின உழைப்பு
Australia மற்றும் West Indies அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி கபாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இளம் வேகப்புயல் Shamar Joseph.
இதற்கு முந்தைய நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க் வீசிய பந்தில் Shamar Joseph காலில் காயமடைந்தார். அப்போது அவர் அழுதுகொண்டே மைதானத்தை விட்டு வெளியேறினார்.
ஆனால், அதற்காக தனது பந்துவீச்சில் முழுபலத்தையும் காண்பிக்க வேண்டும் என்று உயிரைக் கொடுத்து விளையாடி 12 ஓவர்களை தொடர்ச்சியாக வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற முழு காரணமாக Shamar Joseph இருந்தார்.
அதிகபட்ச சம்பளம்
இந்நிலையில் வெற்றியை கொடுத்த ஷமர் ஜோசப்பின் உரிமை ஒப்பந்தத்தை தற்போது வெஸ்ட் இண்டீஸ் வாரியம் சர்வதேச ரிட்டைனர் ஒப்பந்தமாக மேம்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால், சர்வதேச அளவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச சம்பளம் போல ஷமர் ஜோசப்புக்கும் கிடைக்கும்.
முன்பு செக்யூரிட்டி.., இன்று உயிரை கொடுத்து விளையாடி அவுஸ்திரேலியாவை மிரள வைத்தவர்: யார் இந்த Shamar Joseph?
மேலும், வெஸ்ட் இண்டீசுக்காக அதிகமான போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். இதனிடையே, 2024 டி20 உலகக்கோப்பையில் ஷமர் ஜோசப்புடன் சேர்ந்து வேலை செய்யவுள்ளதாக பயிற்சியாளர் டேரன் சமி அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |