குச்சி ஐஸ் சாப்பிடுவதை பிரித்தானிய பாடத்திட்டத்தில் சேர்க்க பரிந்துரை: ஒரு சுவாரஸ்ய தகவல்
பிரித்தானியாவில், ஒரு பள்ளியில், ஆசிரியர் மாணவர்களிடம், பிள்ளைகளே, நீங்கள் அன்றாடம் குடிக்கும் பால் எங்கிருந்து கிடைக்கிறது தெரியுமா என்று கேட்டாராம்.
அதற்கு பதிலளித்த ஒரு சிறுமி, அதிகாலையில், அம்மா வீட்டுக் கதவைத் திறப்பார்கள். அங்கு ஒரு போத்தலில் பால் வைக்கப்பட்டிருக்கும் என்று கூறினாளாம்.
அதாவது, பால், பசுவிலிருந்து கிடைக்கிறது என்பது குழந்தைகளுக்குத் தெரியவில்லை என்பதைக் காட்டுவதற்காக, இப்படி ஒரு கதை சொல்லப்படுவதுண்டு.
அடிப்படை தெரியாதவர்களுக்கு ஆங்கிலக் கல்வி
ஆக, பிள்ளைகள் பலருக்கு உலகத்தைக் குறித்த, அன்றாட வாழ்வைக் குறித்த அடிப்படை விடயங்கள் தெரியவில்லை.
அவர்கள், நடைமுறையில் பல விடயங்களை அனுபவித்துக் கற்றுக்கொள்ளாமல், ஏட்டுச் சுரைக்காய் போலத்தான் கல்வி கற்றுக்கொள்கிறார்கள் என்னும் ஒரு கருத்து நிலவுவதை மறுப்பதற்கில்லை.
இந்நிலையில், பாடத்திட்டத்தில், கணிதம் மற்றும் ஆங்கிலத்துக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. போதுமான அளவில் அறிவியல் பாடங்கள் இல்லை என்னும் கருத்தும் நிலவுகிறது.
ஆகவே, 3 முதல் 11 வயது வரையுள்ள பிள்ளைகளுக்கு, அன்றாட வாழ்வின் அறிவியலை, நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள பல முன்னணி அறிவியல் நிறுவனங்கள் பரிந்துரைத்துள்ளன.
குச்சி ஐஸ் சாப்பிடுவதை பாடத்திட்டத்தில் சேர்க்க பரிந்துரை
சூடு, குளிர்ச்சி என்னும் வெப்பநிலைகளை கற்றுக்கொள்ள குச்சி ஐஸ் சாப்பிடக் கொடுப்பதைவிட, வேறு எந்த வகையில் பிள்ளைகளுக்கு எளிதாக கற்றுக்கொடுக்கமுடியும் என்கிறார் வேதியல் ஆசிரியரும், கல்விக்கொள்கை நிபுணருமான Aylin Ozkan என்பவர்.
ஆகவே, பள்ளிகளில் தோட்டம் அமைத்தல், மண் தோண்டுதல், மாவு பிசைதல், காய்கறிச் செடிகளை வளர்த்தல் போன்ற பல விடயங்களை சிறு பிள்ளகளுக்கு நடைமுறையில் கற்றுக்கொடுக்க அறிவியலாளர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.
இந்த பரிந்துரையை, ஆசிரியர்கள் பலரும் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |